- Advertisement 3-
Homeவிளையாட்டு2 ஆண்டுகள் கழித்து அணியில் வந்தவருக்கு அபராதம் விதித்து ஆப் செய்த ஐசிசி. இது என்னப்பா...

2 ஆண்டுகள் கழித்து அணியில் வந்தவருக்கு அபராதம் விதித்து ஆப் செய்த ஐசிசி. இது என்னப்பா இவருக்கு வந்த சோதனை.

- Advertisement 1-

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் போட்டி இந்த ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கி நடந்து வருகிறது. இந்த போட்டியில் மூன்று நாட்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் இரு அணிகளுக்கும் வெற்றிவாய்ப்பு சம அளவில் உள்ளது. மூன்றாம் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.

இந்த ஆஷஸ் தொடருக்காக 2 ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமல் ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வந்த மொயின் அலி மீள்வருகை தந்துள்ளார். அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பயிற்சியாளர் மெக்கல்லம் ஆகியோரின் அழைப்பை ஏற்று அவர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பியுள்ளார்.

இந்த போட்டியில் பேட்டிங்கில் 18 ரன்கள் சேர்த்த மொயின் அலி, பவுலிங்கில் 29 ஓவர்கள் பந்துவீசினார். அதில் 124 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார். இந்நிலையில் ஐசிசி விதிகளை மீறிய காரணத்துக்காக அவருக்கு போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

போட்டியில் பந்துவீசும் போது அவர் கையில் ஈரப்பதத்தை குறைப்பதற்காக ஸ்ப்ரே ஒன்றை பயன்படுத்தியுள்ளார். இது பந்தை சேதப்படுத்தும் பால் டேம்பரிங் கீழ் வராது. ஆனாலும் நடுவர்கள் அனுமதி இல்லாமல் பந்துவீசும் போது எந்தவிதமான திரவப் பொருளையும் கையில் பயன்படுத்தக் கூடாது என்பது ஐசிசி விதி. இந்த விதியை மீறியதால் அவருக்கு அபராதமும் மேலும் அபராதத்தோடு அவருக்கு ஒரு மைனஸ் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் அவர் மேலும் 3 மைனஸ் புள்ளிகள் பெற்றால், அவருக்கு இரண்டு டெஸ்ட் போட்டிகள் விளையாட தடை விதிக்கலாம்.

- Advertisement 2-

மொயின் அலி சிஎஸ்கே அணிக்காக சில ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருவதால் அவருக்கு இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் மொயினுக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருப்பது தமிழ் ரசிகர்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்கலாமே: எல்லாமே மாறிப்போச்சு, இந்திய அணியில முன்ன நண்பர்களா இருந்தவங்க இப்போ அப்படியே மாறிட்டாங்க. எல்லாரோட எண்ணமும் வேற மாதிரி இருக்கு – அஸ்வின் பேச்சு

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பால் டேம்பரிங் செய்த குற்றத்துக்காக அப்போதைய ஆஸி அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டனர். ஸ்டீவ் ஸ்மித் தன்னுடைய கேப்டன் பதவியை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதில் இருந்து களத்தில் பவுலர்கள் செயல்கள் ஐசிசி மற்றும் நடுவர்களால் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது.

சற்று முன்