- Advertisement -
Homeகிரிக்கெட்ஒரே ஓவரில் நடந்த தவறு.. முன்னாள் சிஎஸ்கே வீரருக்கு ஐபிஎல் தொடரில் வந்த சோதனை..

ஒரே ஓவரில் நடந்த தவறு.. முன்னாள் சிஎஸ்கே வீரருக்கு ஐபிஎல் தொடரில் வந்த சோதனை..

-Advertisement-

நடப்பு ஐபிஎல் தொடரின் 40 வது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் மோதியது. இரு அணிகளுக்குமே இந்த போட்டியில் வெற்றி மிக முக்கியமாக இந்த சூழலில் தான் இரு அணிகளும் நெருக்கடியில் களம் இறங்கி இருந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்திருந்தது.

முதல் ஏழு ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 49 ரன்கள் மட்டும் தான் எடுத்திருந்தது. குஜராத் அணியின் பந்து வீச்சாளர் சந்தீப் வாரியர் முதல் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றி அதிக குடைச்சலை கொடுக்க பெரிய ஸ்கோரை குவிக்க, டெல்லி அணிக்கு நிச்சயம் சவாலாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பின்னால் வந்த அக்சர் படேல் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் சிறப்பாக ஆடி 113 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்திருந்தனர். இதில் அக்சர் படேல் 43 பந்துகளில் ஐந்து ஃபோர்கள் மற்றும் நான்கு சிக்ஸர்களுடன் 66 ரன்கள் எடுத்து ஐபிஎல் தொடரில் தனது அதிகபட்ச ஸ்கோரையும் பதிவு செய்திருந்தார். இறுதிக்கட்டத்தில் வந்த ஸ்டப்ஸும் 7 பந்துகளில் 26 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேப்டன் ரிஷப் பந்த் 43 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் ஐந்து ஃபோர்களுடன் 88 ரன்கள் எடுத்திருந்தார்.

அதிலும் குறிப்பாக டெல்லி அணி கடைசி ஐந்து ஓவர்களில் 97 ரன்கள் எடுத்திருந்தது பலரையும் மிரண்டு பார்க்க வைத்திருந்தது. 15 ஓவர்கள் வரை போட்டியை கட்டுப்பாட்டில் வைத்திருந்த குஜராத் அணி, கடைசி ஐந்து ஓவர்களில் செய்த சில தவறான முடிவுகளால் அதிக ரன்களையும் டெல்லி அணி குவித்திருந்தது.

-Advertisement-

கடைசி 2 ஓவர்களில் மட்டும் மொத்தம் 51 ரன்கள் சேர்க்கப்பட, அதில் மோஹித் ஷர்மாவின் கடைசி ஓவர் தான் பெரிய இடியாக அமைந்திருந்தது. அந்த ஓவரில், ரிஷப் பந்த் 4 சிக்ஸர்களுடன் 30 ரன்கள் சேர்க்க, மொத்தம் 31 ரன்கள் அந்த ஓவரில் சேர்க்கப்பட்டது. குஜராத் அணிக்காக சிறப்பாக பந்து வீசிவரும் மோகித் சர்மா, சில போட்டிகளில் ரன்கள் அதிகம் வாரி வழங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அப்படி ஒரு சூழலில், டெல்லி அணிக்கு எதிராக கடைசி ஓவரில் கொடுத்த 31 ரன்களுடன்73 ரன்களை அள்ளி வழங்கி இருந்தார் மோஹித் ஷர்மா. இதனால், டெல்லியும் 220 ரன்களை கடந்திருந்ததுடன் ரிஷப் பந்த்தும் அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் 3 வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். ஐபிஎல் வரலாற்றிலேயே 70 ரன்களுக்கு மேல் அள்ளி வழங்கிய முதல் வீரர் என்ற பெயரையும் மோஹித் ஷர்மா எடுக்க, குஜராத் ரசிகர்களும் இதனால் நொந்து போயுள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும்.

-Advertisement-

சற்று முன்