- Advertisement -
Homeகிரிக்கெட்தோனியின் முதல் கிரிக்கெட் பேட் ஸ்பான்சரின் தற்போதைய நிலை. இன்று வரை மைதானத்தில் நேரில் ஒரு...

தோனியின் முதல் கிரிக்கெட் பேட் ஸ்பான்சரின் தற்போதைய நிலை. இன்று வரை மைதானத்தில் நேரில் ஒரு போட்டியை கூட அவர் கண்டதில்லையாம்.

-Advertisement-

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோனி கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணியை தலைமை தாங்கி இதுவரை ஐந்து கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக மட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காகவும் மூன்று விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்று தந்த பெருமை கொண்ட தோனியின் கிரிக்கெட் கரியர் அவ்வளவு எளிதாக அமையவில்லை.

அவரது கிரிக்கெட் கரியரில் கண்ட ஏற்றத்தாழ்வுகளை ஏற்கனவே நாம் அறிந்துள்ளோம். அந்த வகையில் அவரது கரியரில் மிகவும் உறுதுணையாக இருந்த அவரது நண்பர் பரம்ஜீத் சிங் குறித்து சில தகவல்களை இங்கே காணலாம். ஏற்கனவே எம்.எஸ் தோனி தி அன்ட் டோல்ட் ஸ்டோரி என்ற தோனியின் பயோபிக் படத்திலும் பரம்ஜீத் சிங் தோனிக்கு எவ்வாறெல்லாம் உதவி புரிந்தார் என்பது காண்பிக்கப்பட்டது.

அப்படி தோனியின் முதல் கிரிக்கெட் பேட் ஸ்பான்சராக இருந்த அவரும் சிறுவயதில் ஒரு கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிட தக்கது. ஆனால் ஸ்போர்ட்ஸ் கடையை திறந்த பிறகு அவர் கிரிக்கெட்டை விட்டு விலகினார். ஆனால் தொனியை விட்டு விலகவில்லை.

அவர் தோனியின் திறமையை சிறுவயதிலிருந்தே பார்த்து அவருக்காக முதல் கிரிக்கெட் பேட் ஸ்பான்சர்ஷிப்பை பெற்று கொடுத்து ரஞ்சி லெவலில் தோனி விளையாட உதவி உள்ளார். தற்போதும் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் தான் பரம்ஜீத் சிங் இருந்து வருகிறார். இப்போது அவர் ஒரு சிறிய விளையாட்டு உபகரணங்கள் கொண்ட கடையினை நடத்தி வருகிறார்.

-Advertisement-

அதோடு தோனி சர்வதேச கிரிக்கெட்டில் நுழைவதற்கு முன்னதாக அவருக்கான சில ஸ்பான்சர்ஷிப்புகளையும் பரம்ஜீத்சிங் பெற்றுக் கொடுத்துள்ளார். அதிலும் குறிப்பாக ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து ஜலந்தர் வரை பயணம் செய்து ஆறு மாதங்களாக அலைந்து தோனிக்கான முதல் கிரிக்கெட் பேட் ஸ்பான்சர்ஷிப்பை பெற்று தந்த பரம்ஜீத் சிங் இன்று தோனி இவ்வளவு உயரத்தில் இருக்க மிக முக்கியமான காரணமாக அமைந்துள்ளார்.

இதையும் படிக்கலாமே: பைனல் முடிந்த அடுத்த நாள் சிவம் துபே எனக்கு போன் செய்து, இதை எல்லாம் கூறினார். சிலர் நினைப்பது போல் கிடையாது தோனி – ரகசியம் பகிர்ந்த ராஜாமணி

இந்நிலையில் பரம்ஜீத் சிங் அளித்துள்ள ஒரு பேட்டியில் : இந்திய அணிக்காக தோனி விளையாடும் ஒரு போட்டியை கூட மைதானத்தில் நேரில் சென்று பார்த்ததில்லை என்றும் அவர் நடத்திவரும் கடையிலே தான் சிறிய தொலைக்காட்சி பெட்டியின் மூலம் தோனியின் ஆட்டத்தை பார்த்து வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் தோனி உட்பட இந்திய அணி வீரர்கள் அனைவரும் கையொப்பமிட்ட ஒரு பேட்டை இன்றளவும் தனது கடையில் வைத்து அவர் போட்டிகளை பார்த்து வருவதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்