- Advertisement -
Homeகிரிக்கெட்கேட்ச் எடுத்தா மட்டும் பத்தாது பாஸ்.. 5 வருசமா சேப்பாக்கத்தில் தோனியால் முடியாத விஷயம்.. ஏக்கத்தில்...

கேட்ச் எடுத்தா மட்டும் பத்தாது பாஸ்.. 5 வருசமா சேப்பாக்கத்தில் தோனியால் முடியாத விஷயம்.. ஏக்கத்தில் ரசிகர்கள்..

-Advertisement-

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை இரண்டு போட்டிகளில் ஆடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இரண்டிலுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பு தனது கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகி இருந்தது, கடும் விமர்சனத்தை சந்தித்திருந்த சூழலில் அடுத்த கேப்டனாக ருத்துராஜ் நியமிக்கப்பட்டிருந்தார்.

அவரது கேப்டன்சியில் இரண்டு போட்டிகளிலுமே சிஎஸ்கே அணி சிறப்பாக ஆடி இருந்ததுடன் மட்டுமல்லாமல் நல்லதொரு தலைமை பண்பையும் வெளிப்படுத்தி இருந்ததால் ரசிகர்கள் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியதை மறந்து ருத்துராஜை கொண்டாடவே தொடங்கிவிட்டனர். அதே போல, தோனியை போன்று கூலாகவும் ருத்துராஜ் கேப்டன்சி செய்து வருவது சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.

தோனி கேப்டனாக இல்லை என்றாலும் அவரது கீப்பிங் மற்றும் பேட்டிங்கை பார்க்கவும் ரசிகர்கள் தொடர்ந்து ஆவலாக இருந்தது வருகின்றனர். இந்த இரண்டு போட்டிகளிலும் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றிருந்த நிலையில் தோனிக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அவரது பேட்டிங்கை எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமே மிஞ்சி இருந்தது.

ஆனால் அதே வேளையில் முதல் போட்டியில் ஒரு சில கேட்ச்கள் மற்றும் ரன் அவுட்டை செய்திருந்த தோனி குஜராத் அணிக்கு எதிராக சமீபத்தில் நடந்து முடிந்த போட்டியில் விஜய் சங்கரின் கேட்சை மிக அபாரமாக பறந்து போய் பிடித்திருந்தது, 42 வயதிலும் அவரது ஃபிட்னஸ்ஸை வெளிப்படுத்தி இருந்தது.

-Advertisement-

இந்த கேட்சை கண்ட ரசிகர்கள் ஒரு நிமிடம் வியந்து தான் போனார்கள். இளம் விக்கெட் கீப்பர்கள் கூட பிடிக்க சிரமப்படும் ஒரு கேட்சை அசால்டாக தோனி பிடித்திருந்தது தற்போது வரையிலும் தொடர்ந்து பேசு பொருளாக தான் இருந்து வருகிறது. அடுத்த ஐந்து போட்டிகளில் சிஎஸ்கே அணி ஒரு போட்டியை மட்டும் தான் சேப்பாக்கம் மைதானத்தில் ஆடவுள்ள சூழலில் மற்ற அனைத்து போட்டிகளுமே எதிரணியின் ஹோம் கிரவுண்டில் தான் நடைபெறுகின்றது.

இந்த நிலையில் தான் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தோனி ரசிகர்கள் ஒரே ஒரு விஷயத்துக்காக தொடர்ந்து ஏங்கி வருகிறார்கள். ஐபிஎல் போட்டியில் கடைசியாக தோனி கடந்த 2022 ஆம் ஆண்டு தனது அரை சதத்தை அடித்திருந்தார். ஆனால் அதே வேளையில் கடந்த 2019 ஆம் ஆண்டு சேப்பாக்கம் மைதானத்தில் தோனி ராஜஸ்தான் அணிக்கு எதிராக 46 பந்துகளில் 75 ரன்கள் எடுத்திருந்தார்.

அதன் பின்னர் சேப்பாக்கம் மைதானத்தில் சில போட்டிகளில் தோனி ஆடி இருந்தாலும் ஒரு முறை கூட அவரால் 50 ரன்கள் அடிக்க முடியவில்லை. இந்த சீசனில் 2 போட்டியும் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்திருந்த போதிலும் சிஎஸ்கே அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வலுவாக இருந்ததால் தோனியின் பேட்டிங்கை பார்க்கவே ரசிகர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதே வேளையில் இந்த சீசன் தோனிக்கு கடைசியாக இருக்கலாம் என்றும் கருதப்படும் நிலையில் மீதமுள்ள போட்டிகளில் தோனி பேட்டிங் செய்து சேப்பாக்கம் மைதானத்தில் கடைசியாக ஒரு அரை சதத்தை அடிக்க வேண்டும் என்பதும் ரசிகர்களின் ஐந்து வருட ஏக்கமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்