- Advertisement -
Homeகிரிக்கெட்கேப்டன்னா எப்படி இருக்கணும் தெரியுமா.. ஹர்திக்கின் தலைமையை மறைமுகமாக சீண்டிப் பாத்த தோனி?..

கேப்டன்னா எப்படி இருக்கணும் தெரியுமா.. ஹர்திக்கின் தலைமையை மறைமுகமாக சீண்டிப் பாத்த தோனி?..

-Advertisement-

ஐபிஎல் தொடரில் தற்போது பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம் கண்ட நான்கு அணிகளின் ரசிகர்கள் மிக உற்சாகமாக இருந்தாலும் முன்னேற முடியாமல் வெளியேறிய அணிகளின் ரசிகர்கள் மிகுந்த வேதனையிலும் உள்ளனர். அதிலும் குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள், இந்த சீசனில் சந்தித்த மன அழுத்தத்தை மற்ற எந்த அணிகளின் ரசிகர்களும் நிச்சயம் சந்தித்திருக்க மாட்டார்கள்.

இதற்கு மிக முக்கிய காரணம் வெறும் பத்து ரன்கள் வித்தியாசத்தில் ரன் ரேட் அடிப்படையில் சிஎஸ்கே அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்தது தான். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தாலும் குறிப்பிட்ட ரன்னை எட்டி இருந்தால் போதுமானதாக இருந்திருக்கும்.

ஆனால் அதனைக் கூட எட்ட முடியாமல், 201 ரன்கள் அடிக்க வேண்டிய இடத்தில் 191 ரன்களை மட்டுமே எடுத்து பரிதாபமாக பிளே ஆப் வாய்ப்பை இழந்திருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ். அந்த அணியின் தொடக்க பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரண்டும் பல போட்டிகளில் மோசமாக இருந்த நிலையில் பிளே ஆப் தகுதி பெறாமல் போனதற்கு முக்கிய காரணமாகவும் அந்த விஷயங்கள் தான் அமைந்திருந்தது.

சென்னை சேப்பாக்கத்தில் இறுதிப்போட்டி நடைபெற உள்ளதால் சிஎஸ்கே முன்னேறி கோப்பையை வெல்வார்கள் என்றும், தோனிக்கு நல்ல ஒரு ஃபேர்வெல்லை கொடுப்பார்கள் என்றும் ரசிகர்கள் நம்பி காத்திருந்து வந்தனர். ஆனால் அது தற்போது நடக்காமல் போனதால் தோனி அடுத்த சீசனில் ஆடுவாரா என்பதே பெரிய புதிராக உள்ளது.

-Advertisement-

இதனிடையே சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கேப்டன்ஷிப் பற்றி தோனி பேசிய விஷயங்கள் அதிகம் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக தோனி பேசுகையில், “கேப்டன்சியில் முக்கியமான விஷயம் என்னவென்றால் நீங்கள் வழிநடத்தும் வீரர்களின் மரியாதையை நீங்கள் தான் சம்பாதிக்க வேண்டும் என்பது. நீங்கள் அவர்களுக்கு கட்டளை போட்டோ அல்லது நீங்களாகவோ அந்த மரியாதையை கேட்டு வாங்க முடியாது. அதுவாக சம்பாதிக்கப்பட வேண்டும்.

நான் இங்கு கேப்டனாக இருக்கிறேன், அதனால் நீங்கள் என்னை மதிக்க வேண்டும் என்று கேப்டன் பொறுப்பில் இருக்கும் ஒருவரால் நிச்சயம் கூற முடியாது. ஒரு கேப்டனாக நீங்கள் இருக்கும் சமயத்தில் தனி மனிதனாக அந்த மரியாதையை மற்றவர்களிடம் இருந்து பெற முயற்சிக்க வேண்டும். அதுதான் சிறந்த லீடர்ஷிப்” என தோனி கூறியுள்ளார்.

இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியா தலைமையில் ஆடிய போது ஏராளமான விமர்சனங்களை சந்தித்திருந்தது. அதிலும் ஹர்திக் பல முடிவுகளை தனியாக எடுக்கிறார் என்றும் அணியில் பிளவு உருவாக அவரது முடிவுகள் காரணம் என்றும் பல விமர்சனங்கள் உருவாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதனால், கேப்டன்சி பற்றி தற்போது தோனி சொன்ன அறிவுரை, ஹர்திக் பாண்டியாவிற்கு நிச்சயம் பொருத்தமாக இருக்கும் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

-Advertisement-

சற்று முன்