- Advertisement -
Homeகிரிக்கெட்பையன் என்னை மாதிரியே தான்.. முதல் முறையாக கேப்டன் ருத்துராஜ் பற்றி பேசிய தோனி..

பையன் என்னை மாதிரியே தான்.. முதல் முறையாக கேப்டன் ருத்துராஜ் பற்றி பேசிய தோனி..

-Advertisement-

தோனிக்கு தற்போது 42 வயதாகும் நிலையில் இனி வரும் ஐபிஎல் தொடரில் அவர் தொடர்ந்து ஆடமாட்டார் என்பதால் வருங்கால அணியின் கேப்டனை தயார் செய்யும் விதத்தில் தான் ருத்துராஜை புதிய கேப்டனாக சிஎஸ்கே நியமித்திருந்தது. தோனி ரசிகர்களை கொஞ்சம் வெறுப்பேற்றும் வகையில் இந்த முடிவு அமைந்திருந்தாலும் அதன் பின்னர் இதுவரை நடந்து முடிந்த இரண்டு போட்டிகளில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றதால் ருத்துராஜ் கேப்டன்சி மீது ரசிகர்களுக்கு நம்பிக்கையும் பிறந்துள்ளதுடன் பலர் அவரது தலைமையை பாராட்டியும் வருகின்றனர்.

தோனியை போலவே வருங்காலத்தில் சிஎஸ்கேவை வழி நடத்தும் திறமை அவரிடம் இருப்பதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். போட்டிக்கு முன்னரும் பின்னரும் பேசும்போது கூட மிகவும் நிதானமாக எந்தவித பதற்றமும் இல்லாமல் கூலாக பேசுவதுடன் மட்டுமில்லாமல் போட்டிக்கு நடுவே ஃபீல்டிங்கின் போதும் சிறப்பாக பவுலிங் ரொட்டேஷனை செய்து வருகிறார் ருத்துராஜ்.

இதனால் தோனி இல்லாமல் சிஎஸ்கே அணி வருங்காலத்தில் ஆடினாலும் அவரைப் போன்ற ஒரு கேப்டன் இல்லை என யாரையும் தோன்ற வைக்க முடியாமல் சிறப்பாக பங்களிப்பையும் ருத்துராஜ் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூர் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில் வெற்றி கண்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அடுத்த போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக மார்ச் 31 ஆம் தேதியன்று மோதுகிறது.

அந்த போட்டியிலும் வென்று, தங்களின் வெற்றி பயணத்தை தொடரும் நோக்கில் சிஎஸ்கே அணி தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சிஎஸ்கே அணி வீரர்களான தோனி, ரச்சின் ரவீந்திரா, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே ஆகியோர் கலந்து கொண்டனர். நான்கு பேரும் தங்கள் கிரிக்கெட் பயணம் குறித்து தெரிவித்த நிறைய கருத்துக்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றிருந்தது.

-Advertisement-

அப்படி ருத்துராஜ் கேப்டன்சி பற்றி தோனி முதல் முறையாக மனம் திறந்து பேசிய விஷயமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த நிகழ்வில், ரச்சின் ரவீந்திராவிடம், “நீங்கள் கேட்ச்சை விட்ட சமயத்தில் தோனியை பார்த்தீர்களா. அவர் உங்களிடம் ஏதாவது கோபமாக பேசினாரா?” என்ற கேள்வியை நெறியாளர் முன் வைத்திருந்தார்.

உடனே ரவீந்திராவின் அருகில் இருந்த தோனி, “இப்போது புதிய கேப்டன் இருக்கிறார்” என சிரித்துக் கொண்டே கூறியதும் அரங்கத்தில் இருந்த அனைவருமே சிரிக்கத் தொடங்கி விட்டனர். இதனைத் தொடர்ந்து பேசி இருந்த எம். எஸ். தோனி, “நான் எப்போதுமே மைதானத்தில் வீரர்களிடம் அதிகம் கோபத்தை வெளிப்படுத்த மாட்டேன். அதிலும் ரச்சின் ரவீந்திரா போல ஒன்று, இரண்டு போட்டிகளில் ஆடியுள்ள வீரர்களிடம் நான் எதையுமே பெரிதாக மைதானத்தில் சொல்ல மாட்டேன்.

என்னைப் போன்ற ஒரு குணத்தைத்தான் ருத்துராஜும் கேப்டனாக கடைப்பிடித்து வருகிறார் என்று நான் உணர்கிறேன். மைதானத்தில் 360 டிகிரி பக்கமும் ரச்சின் ரவீந்திராவை பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. அவர் அங்குமிங்கும் ஓடிக் கொண்டே இருந்ததால் ஏதோ நடனமாடி கொண்டிருப்பது போல் எனக்கு தோன்றியது” என கூறினார்.

-Advertisement-

சற்று முன்