- Advertisement -
Homeகிரிக்கெட்புதிய கேப்டனான ஹர்திக் பாண்டியா.. ரோஹித் ரசிகர்கள் கடுப்பில் செஞ்ச விஷயம்.. அடுத்து என்ன நடக்க...

புதிய கேப்டனான ஹர்திக் பாண்டியா.. ரோஹித் ரசிகர்கள் கடுப்பில் செஞ்ச விஷயம்.. அடுத்து என்ன நடக்க போகுதோ..

-Advertisement-

ஐபிஎல் தொடர் குறித்த தகவல் வெளிவந்த நாள் முதலே ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் அதை பற்றி தான் பேசி வருகின்றனர். இன்னும் சில தினங்களில் ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ள சூழலில், உலக கோப்பைத் தொடர்களில் ஜொலித்த பல வீரர்கள் ஐபிஎல் ஏலத்தின் இறுதி பட்டியலிலும் தேர்வாகி உள்ளனர். இதனால், அந்த வீரர்களை எந்த அணி அதிகம் எடுக்கும் என்பது பற்றி அறிந்து கொள்ளவும், எந்த வீரர் அதிக தொகைக்கு ஏலம் போவார்கள் என்பது பற்றியும் அறியவும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

இதனிடையே, ஐபிஎல் தொடரில் யாரும் நம்ப முடியாத வகையில், மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆட வருகிறார் ஹர்திக் பாண்டியா. அது மட்டுமில்லாமல், அவரை புதிய கேப்டன் ஆகவும் மும்பை அணி நியமனம் செய்துள்ளது. 2021 ஆம் ஆண்டு வரை மும்பை அணிக்காக ஆடி வந்த ஹர்திக்கை 2022 ஆம் ஆண்டில் உருவான குஜராத் டைட்டன்ஸ் அணி டிரேடிங் முறையில் வாங்கி தங்களின் புதிய கேப்டன் ஆகவும் நியமித்திருந்தது.

முதல் சீசனிலேயே ஐபிஎல் கோப்பையை குஜராத் அணிக்காக வென்று கொடுத்து இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் இறுதி போட்டி வரை முன்னேறவும் வழி வகுத்தார். அப்படி இருந்தும் குஜராத் அணியில் இருந்து விலகி மும்பை அணியில் ஆட விரும்பிய ஹர்திக், அந்த அணி நிர்வாகத்தின் அனுமதியுடன் டிரேடிங் முறையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் மீண்டும் இணைந்தார்.

கடந்த 10 ஆண்டுகளாக மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோஹித், ஐந்து முறை அந்த அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றவும் உதவி செய்தார். அது மட்டுமில்லாமல், ஐபிஎல் தொடரின் சிறந்த கேப்டன் என்ற பெருமையும் ரோஹித்தை சாரும். அப்படி இருந்தும் அவருக்கு பதிலாக மீண்டும் ஹர்திக்கை டிரேடிங் முறையில் பெற்றுக் கொண்ட மும்பை, அவரை புதிய கேப்டனாகவும் அறிவித்துள்ளது.

-Advertisement-

இதனிடையே, திடீரென மும்பை இந்தியன்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்துள்ளது. குஜராத் அணிக்காக ஆடி வந்த ஹர்திக், ஒரு நேர்காணலில் மும்பை அணி சிறந்த வீரர்களை வைத்து கோப்பையை வெல்ல நினைக்கும் என்றும், சிஎஸ்கே அணி வீரர்களை எடுத்து சிறந்தவர்களாக மாற்றி கோப்பையை ஜெயிக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

தான் ஆடிய மும்பை அணியை பற்றி இப்படி அவர் பேசியதால் மும்பை ரசிகர்கள் அவரை அதிகம் விமர்சனம் செய்திருந்தனர். தொடர்ந்து அவர் மும்பை அணியில் இணைந்தது பற்றியும் ரோஹித்திற்கு ஆதரவாக இருக்கும் மும்பை ரசிகர்கள் பெரிதாக ஏற்றுக் கொள்ளவில்லை என்று தான் தெரிகிறது. அப்படி இருக்கும் சமயத்தில், ரோஹித்துக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது ரோஹித் ரசிகர்களை இன்னும் கடுப்பாக்கியது என்று தான் சொல்ல வேண்டும்.

மும்பை அணியின் இந்த முடிவு பிடிக்காமல் ரசிகர்கள் பலரும் இனி மும்பை அணிக்கு ஆதரவில்லை என்பது போன்ற கருத்துக்களை குறிப்பிட்டு வருகின்றனர். இதன் காரணமாக, மும்பை இந்தியன்ஸ் அணியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருவதையும் ரசிகர்கள் கவனித்து வருகின்றனர்.

-Advertisement-

சற்று முன்