- Advertisement -
Homeகிரிக்கெட்இதுனால தான் ரோஹித் ஷர்மாவ கேப்டன் பதவியில இருந்து தூக்குனோம்.. மும்பை அணி சொன்ன பரபர...

இதுனால தான் ரோஹித் ஷர்மாவ கேப்டன் பதவியில இருந்து தூக்குனோம்.. மும்பை அணி சொன்ன பரபர தகவல்

-Advertisement-

ஐபிஎல் ஏலம் குறித்த அறிவிப்பு வெளியான நாள் முதலே அனைத்து அணிகள் குறித்து சில ஆச்சரியமான செய்திகளும் வெளிவந்த வண்ணம் தான் உள்ளது. சில அணிகளில் இருந்து முக்கியமான வீரர்களை அவர்கள் விடுவித்தனர். இதே போல, மற்றொரு வியப்பான விஷயமாக பார்க்கப்படுவது மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா திரும்பியது தான்.

2022 ஆம் ஆண்டு புதிதாக ஐபிஎல் தொடரில் என்ட்ரி கொடுத்த குஜராத் டைட்டன்ஸ் அணி, ஹர்திக் பாண்டியாவை மும்பை அணியில் இருந்து டிரேடிங் முறையில் வாங்கி அவரை கேப்டனாகவும் நியமித்திருந்தது. ஐபிஎல் தொடரில் கால்தடம் பதித்த முதல் சீசனிலேயே கோப்பையை வென்று மற்ற அணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்தது ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி.

கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரிலும் இறுதி போட்டி வரை முன்னேறி இருந்த ஹர்திக்கின் குஜராத் அணி கடைசி பந்தில் சிஎஸ்கே அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது. குஜராத் ஆடிய இரண்டு சீசன்களில் இரண்டு முறையும் இறுதி போட்டிக்கு முன்னேற முக்கிய காரணமாக இருந்தவர் அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா.

ஆனால் அவரை 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலத்திற்கு முன்பாக டிரேடிங் முறையில் மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் சொந்தமாக்கிக் கொண்டது. அப்படி இருக்கையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் மீண்டும் சேர்ந்துள்ள ஹர்திக்கை தற்போது அந்த அணியின் கேப்டனாக மும்பை இந்தியன்ஸ் அணி அறிவித்துள்ளது.

-Advertisement-

கடந்த 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் முதல் 10 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்தி வந்த ரோஹித் சர்மா, ஐந்து முறை அந்த அணி கோப்பையை வெல்லவும் உதவி செய்துள்ளார். ஐபிஎல் தொடர் கண்ட மிகச் சிறந்த கேப்டன் என நிச்சயம் ரோஹித்தை சொல்லலாம். இந்த நிலையில் தான் அவருக்கு பதிலாக தற்போது புதிய கேப்டனாக ஹர்திக்கை மும்பை அணி நியமித்துள்ளது. இந்த நிலையில், மும்பை அணி ரோஹித்தை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதற்கான காரணத்தை அந்த அணியின் உலக செயற்பாட்டாளரின் தலைவர் மஹிளா ஜெயவர்த்தனே தெரிவித்துள்ளார்.

“மும்பை இந்தியன்ஸ் அணியை கட்டமைப்பதற்கான ஒரு பகுதி தான் இது. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எங்கள் அணியின் தத்துவமான வருங்காலத்தை தயார் செய்வதன் அம்சமாகும். சச்சின், ஹர்பஜன் சிங், ரிக்கி பாண்டிங் தொடங்கி ரோஹித் ஷர்மா வரை அதிக வெற்றிகளை அணிக்காக பெற்றுக் கொடுத்ததுடன் வருங்காலத்தை பலப்படுத்திய பெருமையும் அவர்களுக்கு உண்டு.

அதனை கருத்தில் கொண்டு தான் தற்போது 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்காக ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சிறப்பாக இத்தனை ஆண்டு காலம் அணியை வழிநடத்தியதற்கு ரோஹித் ஷர்மாவின் தலைமைக்கு எங்களின் நன்றியை கூறிக் கொள்கிறோம். எங்களுக்காக இணையற்ற வெற்றிகளை பெற்று தந்ததுடன் ஐபிஎல் வரலாற்றிலும் சிறந்த கேப்டனாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்” என ஜெயவர்த்தனே தெரிவித்துள்ளார்.

-Advertisement-

சற்று முன்