- Advertisement -
Homeகிரிக்கெட்எல்லா மேட்சும் எங்களால அப்படி ஆட முடியுமா.. ஜெயிச்சா தான் நான் பேசுவேன் - பேட்...

எல்லா மேட்சும் எங்களால அப்படி ஆட முடியுமா.. ஜெயிச்சா தான் நான் பேசுவேன் – பேட் கம்மின்ஸ்

-Advertisement-

இந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி தற்போது பதிவு செய்த வெற்றி உண்மையா அல்லது கனவா என்பது கூட புலப்படாத வகையில் ரசிகர்கள் மெய்சிலிர்த்து போயுள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். பேட்டிங் இறங்கினாலே 200 ரன்களுக்கு மேல் அடித்து எதிரணிகளுக்கு எல்லாம் பயங்காட்டி வந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் கடைசி இடத்தில் இருந்து பிளே ஆப் சுற்று வாய்ப்பையே ஏறக்குறைய தவற விட்டுள்ள பெங்களூர் அணிக்கு எதிராக ஆட்டத்தை காட்ட முடியவில்லை.

ரன்னே சேர்க்க முடியாமல் ஹைதராபாத் அணியின் பேட்ஸ்மேன்கள் திணறல் தான் செய்திருந்தனர். இந்த சீசனில் பலவீனமான பந்து வீச்சு லைன்அப் கொண்டிருக்கும் பெங்களூரு அணிக்கு எதிராக ரன் சேர்க்க தடுமாறியது ஹைதராபாத். முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் 206 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இலக்கை நோக்கி ஆடிய ஹைதராபாத் அணி அதிரடியாக போட்டியை முடிக்கும் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் அதற்கு நேர் மாறாக முதல் ஓவரிலேயே ஒரு ரன்னில் ஹெட் அவுட்டாக, பின்னர் வந்த மார்க்ரம், 7 ரன்னிலும், நிதிஷ் ரெட்டி 13 ரன்களிலும், ஹென்றிச் க்ளாஸன் ஏழு ரன்களிலும் அவுட்டாக ஹைதராபாத் அணியின் வெற்றி வாய்ப்பு ஏறக்குறைய மங்கி போனது.

20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணியால் 171 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி தொடர் வெற்றிகளை குவித்து வந்த ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் இந்த தோல்விக்கு பின்னர் பேசுகையில், “இது ஒரு சிறந்த இரவாக எங்களுக்கு அமையவில்லை. பந்து வீச்சிலும் சில ஓவர்கள் சரியாக பந்து வீசாமல் பேட்டிங்கிலும் துரதிர்ஷ்டவசமாக விக்கெட்டுகளை போட்டி முழுக்க இழந்தோம்.

-Advertisement-

முதலில் பேட்டிங் செய்தால் ஒருவேளை அது எங்களுக்கு வொர்க் ஆகி இருக்கும். கடைசியாக சில வெற்றிகளை அப்படி பெறுவதற்கு முன்பு வரை நாங்கள் முதலில் பந்துவீசி சேசிங் செய்யும் அணி என்று தான் கருதி இருந்தோம். ஆனால் இந்த முறை அது நினைத்தது போல நடக்கவில்லை. எங்கள் அணியில் நான் வெற்றி பெற்றதற்கு பின் பேசுவேன். ஆனால் டேனியல் வெட்டோரி தான் தோல்விகளுக்கு பின் பேசுவார்.

அணி வீரர்கள் அனைவருமே நன்றாகத்தான் செயல்பட்டு வருகின்றனர். டி20 கிரிக்கெட் போட்டிகளில் நீங்கள் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற முடியும் என்று கூற முடியாது. எங்கள் அணியில் இருக்கும் அதிரடி, எங்களின் பலமாக இருந்தாலும் அனைத்து போட்டிகளிலுமே அது வேலை செய்யப் போவது கிடையாது. ஒரு சில போட்டிகளில் எங்களின் ஆரம்பம் நன்றாக போகவில்லை என்றாலும் பின்னர் நல்ல ஸ்கோரை எட்டவும் பேட்ஸ்மேன்கள் வழி செய்திருந்தனர்” என கம்மின்ஸ் கூறினார்.

-Advertisement-

சற்று முன்