- Advertisement -
Homeகிரிக்கெட்இத புரிஞ்சிக்கவே முடியல... வெளியில என்ன பேசினாலும் கவலை இல்லை.. தானா கை கூடி வந்தது...

இத புரிஞ்சிக்கவே முடியல… வெளியில என்ன பேசினாலும் கவலை இல்லை.. தானா கை கூடி வந்தது – பேட் கம்மின்ஸ் பேச்சு

-Advertisement-

இந்தியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. லக்னோவில் இன்று நடைபெற்ற 14வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா அணி, இலங்கை அணியை எதிர்கொண்டது. இரு அணிகளும் ஆடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்ததால் இப்போட்டி மிக முக்கியமாக பார்க்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் குசால் மெண்டிஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார். ஒருபக்கம் பதும் நிசாங்கா, குசால் பெரேரா ஆகியோர் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கி, சிறப்பாக ஆடினர். மறுபக்கம் பவுலிங்கில் ஆஸ்திரேலிய அணி மோசமாகவே துவங்கியது.

முதல் பந்திலேயே ரிவ்யூவை இழந்ததம், எடுக்க வேண்டிய ரிவ்யூவை எடுக்காமலும் வாய்ப்பை தவறவிட்டது. பின் மீண்டும் கேட்சை தவறிவிட்டு சொதப்பியது. இருப்பினும் 20 ஓவர்களுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி சிறப்பாக பந்துவீசி ஆட்டத்தை முற்றிலும் தன் பக்கத்திற்கு மாற்றி, பழைய ஆஸ்திரேலிய அணியாக விளங்கியது. 21.4 ஓவர்களில் 125 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை மட்டும் இழந்திருந்த இலங்கை அணி 43.3 ஓவர்களில் 209 ரன்களுக்கு சுருண்டது.

தொடக்க வீரர்களான நிசாங்கா 61 மற்றும் பெரேரா 78 ஆகியோரை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி 52 ரன்களில் 9 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஜாம்பா 4 விக்கெட்டுகளையும், கேப்டன் கம்மின்ஸ், ஸ்டார்க் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

-Advertisement-

இதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 35.2 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்களை எடுத்து, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக ஜாஷ் இங்லிஸ் 58 ரன்களிலும், மிட்சல் மார்ஷ் 52 ரன்களிலு் ஆட்டமிழந்தனர். இதன் மூலம் இந்த உலகக்கோப்பையில் முதல் வெற்றியை பதிவு செய்து புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்திலிருந்து 8வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இந்த நிலையில் போட்டியில் வெற்றிபெற்றது குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் பேசுகையில், அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த பிறகு இன்று வெற்றிபெற்றது மிகழ்ச்சியாக இருக்கிறது. பீல்டிங்கில் நல்ல எனர்ஜியோடு துவங்கியதால் பின் மற்ற விஷயங்கள் எல்லாம் தானாக கைகூடியது. மீண்டும் எதிரணி சிறப்பாகவே தொடங்கினாலும், பந்துவீச்சாளர்கள் இந்த விக்கெட்டில் சிறப்பாக பந்துவீசி, அவர்களது கடைமையை செய்தது பாராட்டுக்குரியது

இந்த விக்கெட்டை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. ஒருவேளை 300 ரன்கள் எடுத்திருந்தால் டீசன்ட்டானா ஸ்கோராக இருந்திருக்கும். வெளியில் என்ன பேசுகிறார்கள் என்பதெல்லாம் எங்களை பெரிதாக பாதிக்காது. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டோம். இனி வரும் போட்டிகளில் இதை அப்படியே நாங்கள் தொடர விரும்புகிறோம் என்றார்.

-Advertisement-

சற்று முன்