- Advertisement -
Homeகிரிக்கெட்ஐபிஎல் வரலாற்றில் 262 ரன்கள் சேசிங்.. தீயாய் பறந்த பேர்ஸ்டோ, சஷாங்க்.. சிஎஸ்கேவுக்கு காத்திருக்கும் ஆப்பு..

ஐபிஎல் வரலாற்றில் 262 ரன்கள் சேசிங்.. தீயாய் பறந்த பேர்ஸ்டோ, சஷாங்க்.. சிஎஸ்கேவுக்கு காத்திருக்கும் ஆப்பு..

-Advertisement-

இந்த ஐபிஎல் சீசனில் போட்டிக்கு போட்டி ஒரு அணி 200 ரன்களையோ அல்லது இரு அணிகளும் 200 ரன்களையும் தாண்டி வரும் நிலையில் ஒரு பக்கம் அதிரடி கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது விருந்தாக பார்க்கப்பட்டாலும் இன்னொரு பக்கம் ரசிகர்கள் பலரும் சலிப்படையவே தொடங்கி விட்டனர். அந்த வகையில் இன்னொரு போட்டியாக தான் சமீபத்தில் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளின் போட்டி அமைந்திருந்தது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி இரண்டாவது முறையாக ஐபிஎல் தொடரில் 250 ரன்கள் கடந்து இருந்தது. இதற்கு முன்பாக 272 ரன்களை இதே சீசனில் எடுத்திருந்த கொல்கத்தா மீண்டும் ஒருமுறை 250 ரன்களைத தாண்டியதுடன் இருபது ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 261 ரன்கள் எடுத்தது.

கொல்கத்தாவின் தொடக்க வீரர்களான சால்ட் மற்றும் சுனில் நரைன் என இருவரும் சிறப்பாக ஆடி ரன் சேர்க்க பத்து ஓவர்களிலேயே 130 ரன்களையும் அவர்கள் கடந்திருந்தனர். பிலிப் சால்ட் 75 ரன்கள் எடுத்து அவுட்டாக, நரைன் 32 பள்ளிகளில் நான்கு சிக்ஸர்கள் மற்றும் ஒன்பது ஃபோர்களுடன் 71 ரன்கள் எடுத்திருந்தார்.

பின்னர் வந்த வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயஸ் ஐயர், ரசல் என அனைவருமே நல்லதொரு பங்களிப்பை கொடுத்ததால் தான் அவர்களால் மீண்டும் ஒருமுறை தங்களின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரையும் எட்ட முடிந்தது. இதனைத் தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணியோ அப்படியே பதிலடி கொடுக்கும் வகையிலான ஆட்டத்தை ஆடியது.

-Advertisement-

6 ஓவர்களில் 93 ரன்களையும் அவர்கள் எடுத்திருந்த நிலையில் தொடக்க வீரரான பிரப்சிம்ரன் சிங் 20 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். பல போட்டிகளாக தொடர்ந்து சொதப்பி வந்த பேர்ஸ்டோ, இந்த முறை ஃபோர் மற்றும் சிக்ஸர்கள் அடிப்பதில் மட்டும் தான் குறியாகவும் இருந்தார். அவருடன் இணைந்து சஷாங்க் சிங்கும் அதிரடி காட்ட, கடைசி 3 ஓவர்களில் 34 ரன்கள் மட்டும் போதும் என்ற நிலையும் உருவாகி இருந்தது.

பேர்ஸ்டோவும் சதத்தை கடக்க, போட்டியும் மிக மிக எளிதாக மாறிப் போனது. 262 ரன்கள் என்ற இலக்கை எந்த அணிகளும் நெருங்காத நிலையில், மிக அசால்டாக 19 வது ஓவரிலேயே தொட்டு விட்டு அசத்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி. பேர்ஸ்டோ 48 பந்துகளில் 8 ஃபோர்கள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 108 ரன்களும், சஷாங்க் சிங் 28 பந்துகளில் 2 ஃபோர்கள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 68 ரன்களும் எடுக்க, அவர்களின் வெற்றியும் எளிதானது. மேலும் பஞ்சாப் அணியின் ஹை ஸ்கோர் என்பதுடன் ஐபிஎல் வரலாற்றில் சேசிங் செய்யப்பட்ட அதிக ரன்னாகவும் இது மாறி உள்ளது.

இந்த சீசனின் அபாயகரமான அணியாகவும் பஞ்சாப் கிங்ஸ் தற்போது உருவெடுக்க, பலரின் பேவரைட் ஜபிஎல் அணியான சிஎஸ்கேவிற்கு பஞ்சாப் அணியுடன் இரண்டு போட்டிகள் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்