- Advertisement -
Homeகிரிக்கெட்ஆர்ப்பரித்த மைதானம்.. தோனி என்ட்ரியால் பதறிய டி காக் மனைவி.. ஸ்மார்ட் வாட்சில் வந்த எச்சரிக்கை..

ஆர்ப்பரித்த மைதானம்.. தோனி என்ட்ரியால் பதறிய டி காக் மனைவி.. ஸ்மார்ட் வாட்சில் வந்த எச்சரிக்கை..

-Advertisement-

சிஎஸ்கே அணி எந்த மைதானத்தில் மோதினாலும் அது அவர்களின் சொந்த மைதானத்தை போலத்தான் மாறி வருகிறது. மேலும் ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கேவுக்கு நிகராக பலம் வாய்ந்த அணியாக இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் வான்கடே மைதானத்தில் சென்னை அணி மோதி இருந்த போது கூட அதிக ரசிகர்கள் கூட்டம் அவர்களுக்கு தான் இருந்தது. போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பாகவே மைதானத்தை சுற்றிலும் சிஎஸ்கே அணியின் மஞ்சள் நிற ஜெர்சி படை சூழ்ந்திருக்கும் புகைப்படங்களும் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

இவை அனைத்திற்கும் காரணமாக சிஎஸ்கே அணியில இடம் பெற்றுள்ள சீனியர் வீரரான தோனி இருந்து வருகிறார். ஏறக்குறைய 16 சீசன்களாக சிஎஸ்கே அணியை கட்டி காத்து வரும் தோனி ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை அவர்கள் வெல்லவும் உதவியிருந்தார். தற்போது அவருக்கு 42 வயதாகும் நிலையிலும் கூட நான்கைந்து பந்துகள் பேட்டிங் செய்ய வரும் போது சிக்ஸர்களாக அதனை மாற்றும் மேஜிக்கையும் செய்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் இந்த சீசன் தோனிக்கு கடைசி சீசனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஐபிஎல் தொடரில் மட்டுமே அவரை பார்த்து வரும் ரசிகர்கள் சற்று ஏங்கித்தான் போயிருந்தனர். இதனால் சிஎஸ்கே அணி தோல்வி அடையும் போட்டியாக இருந்தாலும் கூட மைதானத்தில் தோனி ஒரு பந்தாவது பேட்டிங் செய்வதை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் மைதானம் முழுக்க சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் படையும் அதிகமாக இருந்து வருகிறது.

எந்த அணியாலும் சிஎஸ்கே ரசிகர்களை தங்களின் சொந்த மைதானங்களில் கட்டுப்படுத்த முடியாத சூழலில் தோனி மைதானத்தில் கால் வைத்தாலே அதனை ஏதோ ஊர் திருவிழா போலவும் ரசிகர்கள் ஆர்ப்பரித்து கொண்டாடி வருகின்றனர். கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் கூட தோனி பேட்டிங் செய்ய வந்தபோது எதிரணி வீரர் ரசல் காதை பொத்திக் கொண்டு ஃபீல்டிங் நின்ற சம்பவமும் பெரிய அளவில் வைரலாகி இருந்தது.

-Advertisement-

இந்த நிலையில் லக்னோ அணியில் இடம் பெற்றுள்ள டி காக்கின் மனைவி, தோனி பேட்டிங் செய்ய வந்தபோது நடந்த சம்பவம் குறித்து பகிர்ந்த பதிவு ரசிகர்களை மீண்டும் ஒருமுறை கட்டிப்போட்டுள்ளது. சென்னை மற்றும் லக்னோ அணிகள் மோதிய போட்டியை டி காக்கின் மனைவியும் பார்க்க மைதானத்திற்கு வந்திருந்தார்.

அப்போது தோனி பேட்டிங் செய்ய வந்தபோது ரசிகர்களின் சத்தத்தால் மைதானமே இரண்டாக பிளந்தது போலிருந்தது. அந்த சமயத்தில் தான் டி காக்கின் மனைவி கையில் கட்டி இருந்த வாட்ச் ஒன்று சுற்றி இருக்கும் சத்தம் அதிகமாக இருப்பதாக எச்சரிக்கை ஒன்றை செய்து அலறியதை புகைப்படத்தின் மூலம் தனது இன்ஸ்டா ஸ்டோரியிலும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரது வாட்சில் தற்போது அந்த பகுதியில் 95 டெசிபல் சத்தம் இருப்பதாகவும் இதுவே 10 நிமிடம் தொடர்ந்தால் காது கேட்கும் திறனை இழக்கும் ஆபத்தும் இருக்கும் என்றும் எச்சரிக்கை செய்ததையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

-Advertisement-

சற்று முன்