- Advertisement 3-
Homeவிளையாட்டுWTC Final 2023: டிராவிட் இதுக்கு சுத்தமா லாயக்கில்ல. இது என்ன ஐபிஎல்-னு நெனச்சிட்டிங்களா? மொத்தமே...

WTC Final 2023: டிராவிட் இதுக்கு சுத்தமா லாயக்கில்ல. இது என்ன ஐபிஎல்-னு நெனச்சிட்டிங்களா? மொத்தமே மூணு பேர் தான் பிட் – கடுமையாக விமர்சித்த முன்னாள் பாக் வீரர்.

- Advertisement 1-

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான பாசித் அலி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி விளையாடி வரும் மோசமான ஆட்டம் குறித்து கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இந்த முக்கியமான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலிய அணி தங்களது முதல் இன்னிங்சில் 469 ரன்களை குவிக்க இந்திய அணியானது 296 ரன்கள் மட்டுமே குவித்துள்ளது. இதன் காரணமாக மீண்டும் ஒருமுறை இந்திய அணி ஐசிசி தொடரில் சிறப்பாக செயல்படும் வாய்ப்பை தவற விட்டுள்ளது என்றே கூறலாம். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணியின் இந்த மோசமான ஆட்டத்தை விமர்சித்து பேசியுள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி கூறுகையில்:

மைதானத்தில் விராட் கோலி, ரஹானே மற்றும் ஜடேஜா போன்ற வீரர்கள் சுறுசுறுப்பாக இருந்தாலும் மற்ற வீரர்கள் மெத்தனமாக மிகவும் டயர்டாக இருப்பதாக கூறியுள்ளார். அதுமட்டுமின்றி ரோகித் சர்மா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது தவறு என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு பிறகு அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே இந்திய அணி வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த முதல் இரண்டு மணி நேரத்திலேயே போட்டியில் பின்தங்கியது. ஐபிஎல் தொடரில் பந்து வீசுவது போன்று இந்த போட்டியில் பந்து வீச முடியாது. இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டுமெனில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீச வேண்டியது அவசியம்.

- Advertisement 2-

தற்போதைய சூழலில் இந்திய அணியில் ரகானே, கோலி, ஜடேஜா ஆகியோரை தவிர்த்து மற்ற வீரர்கள் பிட்டாக இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்திய அணியின் இந்த மோசமான செயல்பாட்டிற்கு பிறகு ராகுல் டிராவிடை விமர்சித்த அவர் கூறுகையில் : நான் ராகுல் டிராவிடன் மிகப்பெரிய ரசிகர். எப்போதுமே அவரை ஒரு கிளாஸ் பிளேயராகவும் லெஜெண்டாகவும் பார்க்கிறேன்.

இதையும் படிக்கலாமே: ஒரு வீரர் ஐபிஎல்-ஐ விட்டு வெளியேற இந்த புதிய விதியை கொண்டு வரணும். ஐபிஎல் தான் முக்கியம்னா எல்லாம் இப்படி தான் மோசமா இருக்கும் – ரவி சாஸ்திரி பேச்சு

ஆனால் ஒரு பயிற்சியாளராக அவர் முற்றிலுமாக ஜீரோ தான். இந்தியாவில் இருக்கும் டர்னிங் பிட்ச்களில் தயாராகி விட்டு இங்கிலாந்து போன்று பவுன்ஸ் நிறைய இருக்கும் பிட்சில் நடைபெறும் இந்த போட்டியில் எவ்வாறு வெற்றி பெற முடியும். வெளிநாட்டு சூழ்நிலைகளில் நடைபெறும் இதுபோன்ற பெரிய போட்டிகளுக்கு ஏற்றார் போல் இந்திய அணியை அவர் தயார் செய்ய வேண்டும். இதெல்லாம் ஒரு பயிற்சியாளராக அவருடைய பணி என டிராவிடை அவர் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்