- Advertisement 3-
Homeவிளையாட்டு3வது வீரராக சுப்மன் கில் சரி வருவாரா? இந்திய ஏ அணிக்காக செய்த தரமான சம்பவம்.....

3வது வீரராக சுப்மன் கில் சரி வருவாரா? இந்திய ஏ அணிக்காக செய்த தரமான சம்பவம்.. டிராவிட் செய்தது சரிதான்!

- Advertisement 1-

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி டோமினிக்காவில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக களமிறங்க உள்ளதாக கேப்டன் ரோகித் சர்மா அறிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் தொடக்க வீரராக ஆடிவந்த சுப்மன் கில் புஜாராவின் 3வது இடத்தில் விளையாடுவார் என்று கூறியுள்ளார். சிறப்பாக ஆடிவரும் சுப்மன் கில்லின் பேட்டிங் வரிசையை எதற்காக இந்திய அணி மாற்ற முயற்சிக்கிறது என்று ரசிகர்கள் புலம்பினர். ஆனால் 3வது வீரராக களமிறங்குவதையே சுப்மன் கில் விரும்புவதாக ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

ஏனென்றால் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் நேரடியாக சென்று 3வது வரிசையில் களமிறங்க விரும்புவதாக சுப்மன் கில்லே தெரிவித்துள்ளார். இதனை ராகுல் டிராவிட் உடனடியாக ஏற்றுக் கொண்டதற்கு பின்னணியில் வேறு ஒரு காரணமும் உள்ளது. இந்திய ஏ அணிக்காக சுப்மன் கில் 4வது வரிசையில் விளையாடி வந்துள்ளார்.

கடந்த முறை இந்திய ஏ அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, 4வது வீரராக களமிறங்கி சுப்மன் கில் இரட்டை சதத்தை விளாசியுள்ளார். அப்போது இந்திய ஏ அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்பட்டுள்ளார். இதன் காரணமாகவே சுப்மன் கில் கேட்டவுடன் ராகுல் டிராவிட் உடனடியாக ஒத்துக் கொண்டுள்ளார்.

- Advertisement 2-

அதுமட்டுமல்லாமல் இந்திய அணியின் டாப் ஆர்டரில் கடைசியாக ஆடிய இடதுகை பேட்ஸ்மேன் என்றால் அது, ஷிகர் தவான் மட்டும்தான். 2018க்கு பின் ஷிகர் தவான் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து கழற்றிவிடப்பட்ட நிலையில், வலதுகை பேட்ஸ்மேன்களே தொடக்க வீரர்களாக விளையாடி வந்தனர். நீண்ட ஆண்டுகளுக்கு பின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மூலம் இந்திய அணி இடதுகை பேட்ஸ்மேனை தொடக்க வீரராக களமிறக்க உள்ளது.

இது இந்திய அணிக்கு சாதகமான பலனை கொடுக்கும் என்று பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்திய அணியில் சீனியர் வீரர்கள் அனைவரும் வலதுகை பேட்ஸ்மேனாக உள்ள நிலையில், டாப் ஆர்டரில் ஜெய்ஸ்வால், மிடில் ஆர்டரில் ரிஷப் பண்ட் மற்றும் ஆல் ரவுண்டர் ஜடேஜா இருப்பதால் 4 வலது பேட்ஸ்மேன்கள் மற்றும் 3 இடதுகை பேட்ஸ்மேன்கள் என்ற கலவையுடன் இந்திய அணி களமிறங்க வாய்ப்புகள் உருவாகியுள்ளது.

சற்று முன்