- Advertisement -
Homeகிரிக்கெட்கடைசி வரை போராடிய பூரன்.. ஒரே ஓவரால் ராஜஸ்தான் பக்கம் திரும்பிய போட்டி.. சம்பவம் செய்த...

கடைசி வரை போராடிய பூரன்.. ஒரே ஓவரால் ராஜஸ்தான் பக்கம் திரும்பிய போட்டி.. சம்பவம் செய்த சாம்சன்..

-Advertisement-

ஐபிஎல் தொடர் ஆரம்பித்த நாள் முதலே ஒவ்வொரு போட்டிகளும் ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் வகையில் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில், தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதிய போட்டியும் முடிவுக்கு வந்துள்ளது.

ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருந்தார். அதன்படி ஆடிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 12 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து அவுட்டாகி இருந்தார். இதேபோல மற்றொரு தொடக்க வீரரான ஜோஸ் பட்லர் 9 ரன்களில் அவுட்டாக, இதன் பின்னர் கைகோர்த்த சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் ஆகியோர் சிறப்பாக ஆடி அணியை ஒரு அளவுக்கு மீட்டெடுத்தனர்.

இருவரும் இணைந்து 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததுடன் மட்டுமில்லாமல் ராஜஸ்தான் அணியின் ரன் ரேட்டும் உயர உதவி செய்தனர். 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு ராஜஸ்தான் அணி 193 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி வரை அவுட் ஆகாமல் களத்தில் நின்ற கேப்டன் சஞ்சு சாம்சன் 52 பந்துகளில் மூன்று ஃபோர்கள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 82 ரன்கள் அடித்திருந்தார்.

இதன் பின்னர் கடின இலக்கை நோக்கி ஆடிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் சிறிய இடைவேளையில் விக்கெட்டுகளை பறிகொடுத்த வண்ணம் இருந்தது. தொடக்க வீரராக களம் இறங்கிய கேப்டன் ராகுல் மட்டும் ஒருபுறம் நிதானமாக ஆடிக் கொண்டிருக்க மறுபுறம் டீகாக், படிக்கல், ஆயுஷ் படோனி, தீபக் ஹூடா என வரிசையாக விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்தது.

-Advertisement-

ஆனாலும் ஐந்தாவது விக்கெட்டுக்கு கைகோர்த்த ராகுல் மற்றும் நிகோலஸ் பூரன் ஆகியோர் ராஜஸ்தான் அணிக்கு அச்சுறுத்தல் கொடுக்கும் வகையிலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். இதனால், ராஜஸ்தான் பக்கம் இருந்த போட்டி, மெல்ல மெல்ல லக்னோ பக்கமும் சரியத் தொடங்கியது.

அப்படி ஒரு சூழலில் தான் கே எல் ராகுல் 58 ரன்களில் அவுட்டான போது போட்டி மீண்டும் இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பான ஒன்றாக மாறியது. ஆனாலும், களத்தில் நின்ற பூரன் பந்துகளை சிக்ஸர் லைனுக்கு வெளியே பறக்க விட்டதால், லக்னோ வெற்றி பெறுவதற்கான வாய்ப்பும் அதிகமாக இருந்தது போல தெரிந்தது. கடைசி 3 ஓவர்களில் லக்னோவின் வெற்றிக்கு 42 ரன்கள் தேவைப்பட, 18 வது ஓவரை அஸ்வின் வீசினார்.

இந்த ஓவரில் 4 ரன்களை மட்டுமே கொடுத்ததுடன் அவர் ஸ்டோய்னிஸ் விக்கெட்டையும் கைப்பற்றி இருந்தார். இதனால், கடைசி 2 ஓவர்களில் 38 ரன்கள் வேண்டும் என்ற நிலையில் ஆடிய லக்னோ அணி, 17 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் வெற்றிகரமாக தொடங்கி உள்ளது.

-Advertisement-

சற்று முன்