- Advertisement -
Homeகிரிக்கெட்தோல்விய ஏத்துக்கவே முடியல.. எங்களுக்கு நடந்த ஒரே நல்ல விஷயம்.. விரக்தியில் புலம்பிய ரிஷப் பந்த்..

தோல்விய ஏத்துக்கவே முடியல.. எங்களுக்கு நடந்த ஒரே நல்ல விஷயம்.. விரக்தியில் புலம்பிய ரிஷப் பந்த்..

-Advertisement-

ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் வாரனர், மார்ஷ், ரிஷப் பந்த், அக்சர் படேல், குல்தீப் யாதவ் என பல வீரர்கள் இருந்த போதிலும் இந்த தொடரில் அவர்கள் இதுவரை ஆடிய இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளனர். மேலும் இதுவரை நடந்து முடிந்த ஒன்பது போட்டிகளில் சொந்த மண்ணில் ஆடும் அணிகள் தான் வெற்றி பெற்று வரும் நிலையில் டெல்லி அணி, 2 போட்டிகளில் எதிரணியின் ஹோம் கிரவுண்டில் ஆடி இருந்தது.

அதுவே அவர்களுக்கு சாதகமாக இல்லாமல் போக ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறும் வாய்ப்பு இருந்த போதிலும் ரியான் பராகின் அதிரடி ஆட்டம் போட்டியையே மாற்றி இருந்தது. பேட்டிங்கை சிறப்பாக தொடங்கியவர்கள், மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்ததால் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடையவும் நேரிட்டது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 36 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போதிலும் அஸ்வின் மற்றும் ரியான் பராக் ஆகியோர் ஒரு கட்டத்தில் சிறப்பான பேட்டிங்கை அமைத்ததால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்திருந்தது.

அதிகபட்சமாக ரியான் பராக் 84 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றிருந்தார். தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணியின் தொடக்க வீரர் வார்னர் மற்றும் மார்ஷ் ஆகியோர் சிறப்பாக ஆடிய போதிலும் அவர்கள் அவுட்டான பின்னர் அந்த அணியால் நல்ல ஒரு ஆட்டத்தை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.

-Advertisement-

கடைசி கட்டத்தில் ஸ்டெப்ஸ் 23 பந்துகளில் இரண்டு ஃபோர்கள் மற்றும் மூன்று சிக்சருடன் 44 ரன்கள் எடுத்த போதிலும் அந்த அணியால் இலக்கை எட்ட முடியாத நிலை தான் உருவாகியிருந்தது. இதனால் தங்களது இரண்டாவது போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்.

அடுத்தடுத்து இரண்டு தோல்விகளுக்கு பின்னால் சற்று ஏமாற்றத்துடன் பேசிய டெல்லி கேப்டன் ரிஷப் பந்த், “கண்டிப்பாக இது பெரிய ஏமாற்றம் தான். இதில் இருந்து சிறப்பான விஷயமாக நாங்கள் நிறைய கற்றுக் கொள்ள மட்டும் தான் எங்களால் முடியும். பந்து வீச்சாளர்கள் 15 முதல் 16 ஓவர்கள் வரை சிறப்பாக பந்து வீசி இருந்தனர். பேட்ஸ்மேன்கள் கடைசி கட்ட ஓவர்களில் அதிரடி காட்டி ரன் சேர்ப்பார்கள். அது தான் இந்த போட்டியிலும் நடந்தது.

மார்ஷ் மற்றும் வார்னர் நல்ல தொடக்கத்தை எங்களுக்காக கொடுத்த போதிலும் மிடில் ஓவர்களில் சில விக்கெட்டுகளை நாங்கள் இழந்ததால் கடைசியில் நிறைய ரன்களை எடுக்க வேண்டும் என்ற நிலையும் உருவானது. இது தவிர இன்னும் சில ஆப்ஷன்களும் எங்களுக்கு இருந்தது. நோர்ஜேவை கடைசி கட்டத்தில் பந்து வீச செய்ய திட்டம் போட்டிருந்தோம். ஆனால் நிறைய ரன்கள் அந்த ஓவரில் சென்றிருந்தது. கண்டிப்பாக அடுத்த போட்டியில் சிறப்பாக ஆடுவோம் என் நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

-Advertisement-

சற்று முன்