- Advertisement -
Homeகிரிக்கெட்திகில் காட்டி ரோகித் சர்மாவின் விக்கெட்டை தூக்கிய தல தோனி

திகில் காட்டி ரோகித் சர்மாவின் விக்கெட்டை தூக்கிய தல தோனி

-Advertisement-

அனல் பறந்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் மே 6ஆம் சேப்பாக்கத்தில் நடைபெற்ற 49வது லீக் போட்டியில் பரம எதிரியான மும்பையை தனது சொந்த மண்ணில் சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொண்டது. அதில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய மும்பைக்கு சமீப காலங்களில் சுமாரான ஃபார்மில் தவிப்பதுடன் கடந்த போட்டியில் டக் அவுட்டான ரோகித் சர்மா மிடில் ஆர்டரில் விளையாடும் திட்டத்தை கையிலெடுத்தார். அதனால் புதிய தொடக்க வீரராக களமிறங்கிய கேமரூன் கிரீன் 6 (4) ரன்களில் துஷார் தேஷ்பாண்டே வேகத்தில் அவுட்டான நிலையில் தீபக் சஹர் வீசிய 2வது ஓவரின் முதல் பந்தில் இசான் கிசான் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அந்த நிலைமையில் களமிறங்கியிருந்த ரோகித் சர்மா ஏற்கனவே சுமாரான ஃபார்மில் தவிப்பதை உணர்ந்த கேப்டன் தோனி ஸ்டம்புக்கு மிகவும் அருகே வந்து தீபக் சஹரை சற்று மெதுவாக வீசுமாறு கேட்டுக்கொண்டார். குறிப்பாக பவர் பிளே ஓவர்களில் ரோகித் சர்மா அதிரடியாக விளையாட முயற்சிப்பார் என்பதை கணித்த அவர் மெதுவாக பந்தை வீசி கேட்ச் கொடுப்பதற்கு தேவையான ஃபீல்டிங்கையும் செட்டிங் செய்தார். அந்த நிலையில் எதிர்பார்க்கப்பட்டது போலவே தீபக் சஹர் வீசிய 5வது பந்தில் விக்கெட் கீப்பருக்கு பின் திசையில் அடிக்க முயற்சித்த ரோகித் சர்மா டாப் எட்ஜ் கொடுத்து ரவீந்திர ஜடேஜாவிடம் கேட்ச் வழங்கி 3 பந்துகளில் டக் அவுட்டானார்.

குறிப்பாக தோனி மிகவும் அருகில் நின்று ஏதோ திட்டத்தை தீட்டுகிறார் என்பதை உணர்ந்த ரோகித் சர்மா சுமாரான பார்மில் இருந்தும் சுற்றி ஃபீல்டர்கள் நிற்கிறார்கள் என்பதை தெரிந்தும் தேவையற்ற ஷாட் அடித்து அவுட்டானார். அப்படி மிடில் ஆர்டரில் விளையாடிய அவருடைய திட்டத்தை எம்எஸ் தோனி தனது சிறப்பான திட்டத்தால் முறியடித்தது நேரலையில் வர்ணனை செய்த சஞ்சய் மஞ்ரேக்கரையும் வியக்க வைத்து பாராட்ட வைத்தது. வரலாற்றில் பல முறை இது போல முக்கிய பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கிய அவர் மீண்டும் ஒருமு றை ரோகித் சர்மாவை திட்டம் போட்டு தகர்த்து தன்னை மிகச் சிறந்த கேப்டன் என்பதை மீண்டும் நிரூபித்தார்.

மறுபுறம் பரிதாபமாக அவுட்டான ரோகித் சர்மா ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான வீரர் (16 முறை) என்ற மோசமான சாதனையை படைத்தார். அதனால் 14/3 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற மும்பைக்கு மிடில் ஆர்டரில் நேஹால் வதேரா 64 (15) சூரியகுமார் யாதவ் 26 (22) என முக்கிய பேட்ஸ்மேன்கள் போராடி கணிசமான ரன்களை எடுத்ததால் 20 ஓவர்களில் மும்பை 139/8 ரன்கள் சேர்த்தது. சென்னை சார்பில் அதிகபட்சமாக மதிசா பதிரான 3 விக்கெட்களை சாய்த்து மிரட்டினார்.

-Advertisement-

சற்று முன்