- Advertisement -
Homeகிரிக்கெட்ஷிவம் துபேவுக்கு வந்த பெரிய சிக்கல்.. ரோஹித் வாயில் இருந்து விழுந்த வார்த்தை..

ஷிவம் துபேவுக்கு வந்த பெரிய சிக்கல்.. ரோஹித் வாயில் இருந்து விழுந்த வார்த்தை..

-Advertisement-

ஐபிஎல் தொடர் தற்போது நடைபெற்று வரும் இதே ஆண்டின் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி டி 20 உலக கோப்பை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் வைத்து ஆரம்பமாக உள்ளது. ஐபிஎல் தொடர் முடிந்த ஒரு வாரத்திலேயே உலக கோப்பையும் தொடங்க உள்ளதால் அனைத்து அணிகளும் இதற்கான ஒரு பயிற்சியாக தான் ஐபிஎல் தொடரையும் கருதி ஆடி வருகின்றனர்.

அதற்கேற்ப இந்த தொடரில் உள்ள பத்து அணிகளில் இடம் பெற்றுள்ள வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், பிசிசிஐ நிர்வாகத்தினருக்கு மிகப்பெரிய ஒரு தலைவலியும் தற்போது உருவாகியுள்ளது.

இந்த முறை ஐபிஎல் தொடரில் சீனியர் வீரர்கள் தொடங்கி புதிதாக இடம் பிடித்துள்ள வீரர்களான மாயங்க் யாதவ், அசுதோஷ் ஷர்மா உள்ளிட்ட வீரர்கள் வரை நல்லதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் டி20 உலக கோப்பை தொடருக்கு எந்த வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதிலே பெரும் குழப்பத்தில் பிசிசிஐ தேர்வாளர்கள் உள்ளனர்.

விக்கெட் கீப்பர்கள் இடத்திற்கு மட்டும் தினேஷ் கார்த்திக், சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த் தொடங்கி எட்டு வீரர்கள் வரை சவால் நிறைந்த திறனையும் போட்டிகளில் வெளிப்படுத்தி வருகின்றனர். இது மட்டுமில்லாமல் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் கூட யாரை தேர்வு செய்வது என்பதில் அதிக நெருக்கடி இந்திய அணி நிர்வாகத்தினருக்கு இருப்பதாகவே தெரிகிறது.

-Advertisement-

அதே போல சென்னை அணியில் இடம் பிடித்து ஆடிவரும் அதிரடி வீரரான ஷிவம் துபே, நிச்சயம் டி 20 உலக கோப்பையில் தேர்வாவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் அவர் பந்து வீச்சில் கவனம் செலுத்தாமல் இருப்பது ஒரு ஆல் ரவுண்டரான அவருக்கு ஒரு பிரச்சினையாகவும் பார்க்கப்பட்டு வருவதால் இதனை கருத்தில் கொண்டு பிசிசிஐ அவரை தேர்வு செய்யாமல் போகலாம் என்ற கருத்தும் எழாமல் இல்லை.

இந்த நிலையில் இது பற்றி இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவே சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். “ஐபிஎல் தொடரில் உள்ள இம்பேக்ட் பிளாயர் விதிக்கு நான் பெரிய ரசிகன் கிடையாது. ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் போன்ற திறன் வாய்ந்த ஆல் ரவுண்டர்களை முடக்கி போடும் விதியாகவும் இது உள்ளது.

இதன் காரணமாக அவர்கள் ஃபீல்டிங் மற்றும் பவுலிங் செய்யாமல் இருப்பது இந்திய அணிக்கு நல்லதொரு செய்தி கிடையாது. கிரிக்கெட் என்பது 11 பேர் ஆடும் போட்டியே தவிர, 12 பேர் ஆடும் போட்டி கிடையாது” என ரோஹித் ஷர்மா கூறியுள்ளார்.

-Advertisement-

சற்று முன்