- Advertisement -
Homeகிரிக்கெட்ஹர்திக் கேப்டன்சில ஆடுறது.. மும்பை டீம்ல என் வேல இது மட்டும் தான்.. முதல் முறையா...

ஹர்திக் கேப்டன்சில ஆடுறது.. மும்பை டீம்ல என் வேல இது மட்டும் தான்.. முதல் முறையா மனம்திறந்த ரோஹித்..

-Advertisement-

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா அறிவிக்கப்பட்ட மறுகணமே இந்த முடிவுக்கு அதிகமாக எதிர்ப்புகள் கிளம்பி இருந்தது. ரோஹித்திற்கு பதிலாக புது கேப்டன், பத்து ஆண்டுகளுக்கு பின் ரோஹித் மற்றொரு கேப்டன் கீழ் ஆட வேண்டியது என பல்வேறு விஷயங்களை நினைத்து கூட பார்க்க முடியாமல் அப்போதிலிருந்தே ஹர்திக் பாண்டியாவை கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ள முடியாமல் ரசிகர்கள் கொந்தளிக்க தொடங்கினர்.

தொடர்ந்து ஐபிஎல் போட்டிகள் ஆரம்பித்த பின்னரும் அவை இருமடங்காக அதிகரிக்க டாஸ் போட வந்தாலும், பேட்டிங் செய்ய வந்தாலும், பந்து வீச வந்தாலும் ஹர்திக் மீதான எதிர்ப்பு தான் அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனிடையே மும்பை அணிக்குள் ஏராளமான பிளவுகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி அந்த அணி பிளே ஆப் செல்லும் வாய்ப்பை ஏறக்குறைய இழக்கும் சூழலும் உருவானது.

பத்து போட்டியில் ஆடி முடித்துள்ள மும்பை அணி மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள நிலையில் மற்ற போட்டிகள் அனைத்திலும் வென்றாலும் ரன் ரேட் அடிப்படையில் தான் முன்னேற முடியும் என கருதப்படுகிறது. அதே போல, ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி, பேட்டிங் மற்றும் பவுலிங் என அனைத்துமே இந்த ஐபிஎல் தொடரில் பலவீனமாக இருப்பதால் அடுத்த சீசனில் புது கேப்டனை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக நியமிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

இதனிடையே ஹர்திக் பாண்டியாவின் தலைமை பற்றி எந்த ஒரு வார்த்தையும் பேசாமல் இருந்து வந்த ரோஹித் ஷர்மா, தற்போது டி20 உலக கோப்பை அணி குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் முதல் முறையாக மனம் திறந்து பேசி உள்ளார்.

-Advertisement-

“நான் முன்பு கேப்டனாக இருந்து அதன் பின்னர் கேப்டனாக இல்லாமல் மீண்டும் கேப்டனாக இருக்கிறேன். அது வாழ்க்கையின் ஒரு பகுதிதான். அனைத்துமே நீங்கள் நினைப்பது போல வாழ்க்கையில் செல்லாது. இது எனக்கு சிறந்த அனுபவமாக இருந்தது. எனது வாழ்க்கையில் நான் இதற்கு முன்பாக கேப்டனாக இல்லாமல் பல கேப்டன்களுக்கு கீழ் நிறைய போட்டிகளிலும் ஆடி உள்ளேன். அது எனக்கு ஒரு விஷயமே கிடையாது.

நான் எப்போதுமே ஒரு வீரராக அணிக்கு என்ன செய்ய வேண்டும், என்ன தேவைப்படுகிறது என்பதில் தான் கவனம் செலுத்தி அதற்கான முயற்சிகளில் இறங்கி வருகிறேன். கடந்த ஒரு மாதமும் நான் அதனை தான் செய்து வருகிறேன்” என கூறியுள்ளார்.

-Advertisement-

சற்று முன்