- Advertisement -
Homeகிரிக்கெட்4 சுழற்பந்து வீச்சாளர்கள்.. என் முடிவை நல்லா விமர்சனம் பண்ணுங்க.. வேர்ல்டு கப்ல பதில் சொல்றேன்.....

4 சுழற்பந்து வீச்சாளர்கள்.. என் முடிவை நல்லா விமர்சனம் பண்ணுங்க.. வேர்ல்டு கப்ல பதில் சொல்றேன்.. தில்லாக பேசிய ரோஹித்..

-Advertisement-

டி20 உலக கோப்பை ஜூன் மாதம் ஒன்றாம் தேதியன்று ஆரம்பமாக உள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருந்தது. 15 பேர் அடங்கிய ஒரு அணியும் இன்னொரு பக்கம் நான்கு ரிசவர்ட் வீரர்கள் என மொத்தம் 19 வீரர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள நிலையில் சில வீரர்கள் தேர்வாகாமல் போனது அதிக விமர்சனத்தை சந்தித்திருந்தது.

ஷிவம் துபே, சஞ்சு சாம்சன் மற்றும் சாஹல் ஆகியோருக்கான வாய்ப்பு மிகச்சிறந்த முடிவு என இந்திய நிர்வாகத்தினரை ரசிகர்கள் பாராட்டி வரும் அதே வேளையில் மற்ற சில முடிவுகள் ரசிகர்களை திருப்திப்படுத்தாமல் போய் உள்ளது. டி 20 போட்டியில் இந்திய அணியின் ஃபினிஷராக இருந்து வருவதுடன் சிறந்த அதிரடி வீரராக இருக்கும் ரிங்கு சிங்கின் பெயர் ரிசர்வ்டு வீரர்கள் பட்டியலில் தான் உள்ளது.

அதேபோல இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் கே எல் ராகுல் பெயரும் டி20 உலக கோப்பை பட்டியலில் இடம் பெறவில்லை. இதேபோல நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் தேர்வாகி உள்ளது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 3 சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு பேட்ஸ்மேன் அல்லது ஒரு வேகப்பந்து வீச்சாளரை கூடுதலாக சேர்த்திருக்கலாம் என்பதும் ரசிகர்களின் பதிலாக உள்ளது.

அப்படி இருக்கையில் தான் ரசிகர்களின் சந்தேகங்கள் மற்றும் விமர்சனங்கள் அனைத்திற்குமே இந்திய அணியின் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்துள்ளனர்.

-Advertisement-

அதில் நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றது பற்றி பேசி இருந்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, “எனக்கு நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் வேண்டுமென நான் விரும்பினேன். ஏனென்றால் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் காலை பத்து, பத்தரை மணிக்கு போட்டி ஆரம்பமாகும். இதில் நான்கு சுழற்பந்து வீச்சாளர்களை நான் தேர்வு செய்ய சில டெக்னிக் யுக்திகள் உள்ளது.

இதற்கான காரணத்தை நான் உலக கோப்பையில் உங்களிடம் சொல்கிறேன். ஹர்திக் பாண்டியா இல்லாமல் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இதனால் அணியும் நல்ல சமநிலையில் உள்ளது. ஜடேஜா மற்றும் அக்சர் படேல் என 2 சுழற்பந்து வீச்சாளர்கள் பேட்டிங் செய்வார்கள். மேலும் எதிரணியை பொறுத்து எங்கள் ஆடும் லெவனையும் நாங்கள் தேர்வு செய்வோம்.

இதனால் குல்தீப் மற்றும் சாஹல் ஆகியோர் இணைந்து ஆடவும் வாய்ப்புள்ளது. அனைத்து விதமான காம்பினேஷன்களையும் நாங்கள் முயற்சி செய்வோம்” என ரோஹித் ஷர்மா கூறினார்.

-Advertisement-

சற்று முன்