- Advertisement -
Homeகிரிக்கெட்ரொம்ப ப்ரெஷர்.. அது தான் எங்களோட பெரிய பிரச்சனை.. என்ன பண்றதுன்னே.. புலம்பிய ருத்து..

ரொம்ப ப்ரெஷர்.. அது தான் எங்களோட பெரிய பிரச்சனை.. என்ன பண்றதுன்னே.. புலம்பிய ருத்து..

-Advertisement-

பல போட்டிகளாகவே தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் அனைத்து அணிகளும் 200 ரன்களுக்கு மேல் அடித்து வந்த நிலையில் சேசிங் கூட எளிதாக தான் இருந்தது. ஆனால் கடந்த இரண்டு போட்டிகளில் அப்படியே அனைத்தும் நேர்மாறாக நடந்து வருகிறது. முன்னதாக மும்பை மற்றும் லக்னோ அணிகள் மோதி இருந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, 144 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய லக்னோ அணியும் எளிதான இலக்காக இருந்த போதிலும் அதனை இருபதாவது ஓவரில் சேஷ் செய்திருந்தது. இதனிடையே, தற்போது சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதி முடித்த போட்டியும் ஏறக்குறைய அந்த வழியில் தான் அமைந்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் அணியின் சுழற் பந்துவீச்சில் சிக்கி ரன் சேர்க்க முடியாமல் சிரமப்பட்டனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

இதனால் பிட்ச் மிகவும் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது என கூறப்பட்ட நிலையில் பின்னர் ஆடிய பஞ்சாப் அணியும் 12 ஓவர்களிலேயே 100 ரன்களை கடந்திருந்தது. அந்த அணியில் அதிரடி காட்டிய பேர்ஸ்டோ மற்றும் ரிலீ ரவுசவ் அவுட்டான பின்னர், சஷாங்க் சிங் மற்றும் சாம் கரண் நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர். இருந்தாலும் எளிய இலக்கு என்பதால், 18 வது ஓவரிலேயே சேஷ் செய்து விட்டனர்.

இந்த தோல்விக்கு பின்னர் பேசியிருந்த சிஎஸ்கே கேப்டன் ருத்துராஜ், “கண்டிப்பாக 50 முதல் 60 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். நாங்கள் பேட்டிங் செய்யும்போது பிட்ச் அந்த அளவுக்கு சிறப்பாக இல்லை. ஆனால் அதன் பின்னர் மெல்ல மெல்ல பிட்ச்சும் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. இம்பேக்ட் ப்ளேயர் விதி இருந்தும் நாங்கள் குறைவான ரன்களை எடுத்து விட்டோம்.

-Advertisement-

டாஸ் வெல்வதற்கான பயிற்சியையும் நான் தற்போது எடுத்து வருகிறேன். இருந்தும் அது சரியாக எங்கள் பக்கம் அம்மையாமல் இருக்கும் போது என்ன செய்வதென்றே தெரியவில்லை. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் டாஸ் போட செல்லும்போது அதிகம் நெருக்கடிக்கு மத்தியில் தான் சென்றிருந்தேன். கடைசி போட்டியில் இது மாதிரியான சூழலில் தான் 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தோம்.

கடந்த இரண்டு போட்டிகளில் மிக கடினமாக போராடி 200 ரன்களுக்கு மேல் அடித்திருந்தோம். ஆனால் இந்த முறை 180 ரன்னை தொடுவதே கடினமாக இருந்தது. வீரர்கள் காயம் காரணமாக வெளியேறுவது நிச்சயமாக மிகப்பெரிய பிரச்சனை. விக்கெட் வேண்டும் என நீங்கள் நினைக்கும் போது இரண்டு பவுலர்கள் மட்டும் இருக்க, பனியும் ஸ்பின்னர்களை செயல்பட விடவில்லை. இது மிகவும் கடினமான சூழல். மீதமுள்ள நான்கு போட்டிகளில் நிச்சயம் வெல்வதற்கான வழிகளை ஆராய்வோம்” என தெரிவித்துள்ளார்.

-Advertisement-

சற்று முன்