- Advertisement -
Homeகிரிக்கெட்சிஎஸ்கேவின் எந்த தொடக்க வீரராலும் முடியாத சாதனை.. கேப்டனாகி சரித்திரம் படைத்த ருத்து..

சிஎஸ்கேவின் எந்த தொடக்க வீரராலும் முடியாத சாதனை.. கேப்டனாகி சரித்திரம் படைத்த ருத்து..

-Advertisement-

17 வது ஐபிஎல் சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதுவரை ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி உள்ளது. ஐபிஎல் வரலாற்றை எடுத்து பார்க்கும் போது அந்த அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் கேப்டன்சி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் சிறப்பம்சமாக பார்க்கப்பட்டு வரும் அதே வேளையில் இத்தனை சீசன்களில் சிஎஸ்கே அணி பயன்படுத்திய தொடக்க வீரர்களும் அதிகம் பெயர் எடுத்தவர்கள் தான்.

ஸ்டீபன் பிளெம்மிங், மேத்யூ ஹைடன், மைக்கேல் ஹசி, முரளி விஜய், பிரண்டன் மெக்கல்லம், டுவைன் ஸ்மித், ஷேன் வாட்சன், பாப் டூப்ளசிஸ், ருத்துராஜ், டெவான் கான்வே என சிஎஸ்கே அணிக்காக தொடக்க வீரர்களாக ஐபிஎல் போட்டிகளில் ஆடிய பல வீரர்கள் மிக முக்கியமான பங்களிப்பையும் அந்த அணிக்காக அளித்துள்ளனர். தற்போது நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கூட கேப்டன் ருத்துராஜ் மற்றும் ரச்சின் ரவீந்திரா, ரஹானே என பல சிறப்பான வீரர்கள் தொடக்க வீரர்களாக ஆடி வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக கடந்த ஐந்து ஆண்டுகளாக சிஎஸ்கே அணிக்காக மட்டும் ஐபிஎல் தொடரில் ஆடிவரும் ருத்துராஜ் கெய்க்வாட், இந்த முறை தோனிக்கு பிறகு தற்போது அணியின் கேப்டன் ஆகவும் பட்டையை கிளப்பி வருகிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் மற்ற தொடக்க பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க சிரமப்பட்டாலும் இரண்டு அரை சதங்கள் மற்றும் ஒரு சதத்துடன் 300 ரன்களுக்கு மேல் இந்த சீசனில் கடந்துள்ள ருத்துராஜ் ஒரு பொறுப்புமிக்க கேப்டன் என்ற பெயரையும் தற்போது எடுத்துள்ளார். இந்த நிலையில் தான் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கி பாப் டூப்ளசிஸ், ஹசி, வாட்சன் உள்ளிட்ட பல ஜாம்பவான்கள் செய்ய முடியாத ஒரு விஷயத்தை தொட்டு சரித்திரம் படைத்துள்ளார் ருத்துராஜ்.

-Advertisement-

சிஎஸ்கே அணியின் தொடக்க வீரராக களம் இறங்கி 50 க்கும் மேற்பட்ட ஸ்கோரை அதிக முறை அடித்த வீரர் என்ற சிறப்பை பெற்றிருந்தவர் பாஃப் டூப்ளசிஸ் (16 முறை). இந்த சாதனையை ஏற்கனவே சமன் செய்திருந்த ருத்துராஜ், தற்போது 17 வது 50 -க்கும் மேற்பட்ட ரன்னை சிஎஸ்கே அணியின் தொடக்க வீரராக அடித்து இந்த சாதனை பட்டியலில் முதலிடத்தையும் பிடித்துள்ளார்.

இனி இந்த சம்பவத்தை நெருங்க புதிதாக ஒரு தொடக்க வீரர் அல்லது 9 முறை சிஎஸ்கேவின் தொடக்க வீரராக ஐம்பது ரன்களுக்கு மேல் அடித்துள்ள கான்வே தொடர்ந்து சிஎஸ்கே அணிக்காக ஆடினால் மட்டுமே அதனை உடைக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்