- Advertisement -
Homeகிரிக்கெட்தோனி இருந்தும் 3 ரன்கள்.. 19 வது ஓவரை ராகுலுக்கு கொடுக்க காரணமே இதான்.. சாம்...

தோனி இருந்தும் 3 ரன்கள்.. 19 வது ஓவரை ராகுலுக்கு கொடுக்க காரணமே இதான்.. சாம் கரண் வெளிப்படை..

-Advertisement-

ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் ஏறக்குறைய இறுதி கட்டத்திற்கும் வந்துவிட்டது. ஒரு சில அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவது ஏறக்குறைய உறுதியாகி வரும் நிலையில் மும்பை, பெங்களூரு, சிஎஸ்கே, பஞ்சாப் உள்ளிட்ட அணிகளுக்கு பிளே ஆப் வாய்ப்பு மிக கடினமாகவே அமைந்துள்ளது.

அனைத்து போட்டிகளிலும் அவர்கள் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று சூழலில், தற்போது கடைசி இடங்களில் இருக்கும் அணிகள் கூட தொடர்ந்து வெற்றிகளை குவித்து பிளே ஆப் செல்லும் அணிகளுக்கு முட்டுக்கட்டையும் போட்டு வருகின்றனர்.

அந்த வகையில் பஞ்சாப் கிங்ஸ் அணி, கடந்த போட்டியில் 262 ரன்களை கொல்கத்தா அணிக்கு எதிராக சேசிங் செய்து சாதனை புரிந்திருந்தது. இதனைத் தொடர்ந்து அதே வேகத்தில் தற்போது சென்னையையும் பஞ்சாப் கிங்ஸ் அணி எதிர்கொண்டு இருந்தது. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே 162 ரன்கள் எடுக்க தொடர்ந்து அடிய பஞ்சாப் அணி, நிதானமாக அடி ரன் சேர்த்தாலும் இலக்கு எளிதாக இருந்ததால் 18 வது ஓவரில் வெற்றியை எட்டிப் பிடித்து சேப்பாக்கத்தில் இருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருத்தது.

சென்னையை சேப்பாக்கம் மைதானத்தில் வீழ்த்திய உற்சாகத்தில் பேசியிருந்த பஞ்சாப் கேப்டன் சாம் கரண், “சென்னையில் வந்து நீங்கள் இரண்டு போட்டிகள் வெற்றி பெறும் போது அது எப்போதுமே சிறந்த உணர்வாக இருக்கும். கடந்த சீசனில் கூட நாங்கள் சொந்த மைதானங்களில் நிறைய போட்டிகளை தோற்று எதிரணியின் மைதானங்களில் வென்றிருந்தோம்.

-Advertisement-

அதே போன்றுதான் இந்த முறையும் நடந்து வரும் நிலையில் இனி உள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று சூழலிலும் நாங்கள் உள்ளோம். அடுத்த சில தினங்களிலும் நாங்கள் இதே அணிக்கு எதிராக ஆட உள்ளோம். தற்போது நாங்கள் ரபாடாவை பவர் ப்ளேவில் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தோம்.

ராகுல் சாகர் அதிக தன்னம்பிக்கையுடன் பந்து வீசி விக்கெட்டுகளை எடுத்து வருகிறார். தோனிக்கு எதிராக 19 வது ஓவரை வீச அழைத்த போதும் தைரியமாக வந்து வீசினார். கடைசி கட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக ரன் கொடுத்ததால் நான் சற்று வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்திருந்தேன். சில நேரம் அது வேலை செய்யும். சில நிறம் உங்களுக்கு கை கொடுக்காமல் போகும்.

இந்த வெற்றி எங்களுக்கு அதிக தன்னம்பிக்கையை கொடுத்துள்ள நிலையில் சுழற்பந்து வீச்சாளர்கள் மிக சிறப்பாக செயல்பட்டு இருந்தனர்” என சாம் கரண் கூறினார்.

-Advertisement-

சற்று முன்