- Advertisement 3-
Homeவிளையாட்டுஷிவம் துபேவ இந்த எண்ணத்துல தான் சேர்த்தாங்க.. இப்படி ஒரு டீம வெச்சுகிட்டு.. விமர்சித்த சஞ்சய்...

ஷிவம் துபேவ இந்த எண்ணத்துல தான் சேர்த்தாங்க.. இப்படி ஒரு டீம வெச்சுகிட்டு.. விமர்சித்த சஞ்சய் மஞ்சரேக்கர்..

- Advertisement 1-

டி 20 உலக கோப்பை நெருங்கி வரும் நிலையில் இன்னும் ஒரு பயிற்சி போட்டியில் கூட இந்திய அணி ஆடத் தொடங்கவில்லை. அதற்கு முன்பாக அந்த அணியில் இருக்கும் பல பிரச்சனைகளை பற்றியும், சாதகங்களை பற்றியும் பட்டியல் போட தொடங்கி விட்டனர் பல கிரிக்கெட் பிரபலங்கள்.

ஜெய்ஸ்வால் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளதால் அவர்தான் நிச்சயம் தொடக்க வீரராக களமிறங்குவார் என பலரும் தெரிவித்து வந்தனர். ஆனால் இன்னும் பலரும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தான் தொடக்க வீரர்களாக களமிறங்க வேண்டும் என்றும் இதன் பின்னர் சஞ்சு சாம்சன், சூர்யகுமார் உள்ளிட்டோர் பேட்டிங் வரவேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

இதேபோன்று ஆல்ரவுண்டர் இடத்திலும் ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே இருக்க யாருக்கு வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். சுழற்பந்து வீச்சிலும் நிறைய ஆப்ஷன்கள் இருக்க, எதிரணியை பொறுத்து தனது திட்டங்களை ரோஹித் சர்மா வகுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி இந்திய அணி எந்த மாதிரியான ஆடும் லெவனை போட்டிகளில் தேர்வு செய்யும் என்பதும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியும் லீக் சுற்றில் இருப்பதால் அதற்கு இந்தியா எப்படி தயாராகும் என்பதும் மிகப் பெரிய ஆவலையும் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement 2-

அனைவரும் கூறுவது போல ஜெயஸ்வால் இடம்பெற்றால் சஞ்சு சாம்சனுக்கான வாய்ப்பு குறைவாக இருக்கும் என தோன்றுகிறது. எப்படி இருந்தாலும் ஒரு சில போட்டிகளில் ஆடும்போதுதான் எந்தெந்த வீரர்கள் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள முடியும்.

இதனிடையே இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சுரேக்கர் இந்திய அணியின் முக்கிய பிரச்சினையை விமர்சித்து கருத்துக்களை தெரிவித்துள்ளார். “இந்திய அணிக்கு மிகப்பெரிய பலவீனமாக இருப்பது ஆல் ரவுண்டர்கள் தான். ஆஸ்திரேலியா அணியில் மிட்செல் மார்ஷ், மேக்ஸ்வெல் மற்றும் கேமரூன் க்ரீன் போன்ற பேட்ஸ்மேன்கள், நான்கு ஓவர்கள் பந்து வீசக்கூடிய ஆல் ரவுண்டர்களாக இருக்கின்றனர்.

அதனால் தான் ஆல் ரவுண்டர்கள் இல்லை என்ற வரம்புகளை தணிப்பதற்காக இந்திய அணி ஷிவம் துபேவை உள்ளே கொண்டு வந்தது என்று நினைக்கிறேன். ஐபிஎல் தொடரில் உள்ள இம்பாக்ட் பிளேயர் விதியின் காரணமாக தான் முழு ஒரு நல்ல ஆல் ரவுண்டர் இல்லாமல் போய்விட்டனர். பேட்டிங் மற்றும் பவுலிங் இந்திய அணிக்கு சிறப்பாக இருந்தாலும் இந்த உலகக் கோப்பை தொடரில் நிச்சயம் இல்லாத விஷயங்களை சரி செய்து யாராவது ஒருவர் இரண்டு முதல் மூன்று ஓவர்கள் வீசியே ஆக வேண்டும்” என சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியுள்ளார்.

சற்று முன்