- Advertisement -
Homeகிரிக்கெட்ரசிகர்கள் முன்னாடி இப்படியா நடந்துக்குறது.. சிஎஸ்கேவ பாத்து கத்துக்கோங்க.. லக்னோ உரிமையாளரால் எழுந்த சர்ச்சை..

ரசிகர்கள் முன்னாடி இப்படியா நடந்துக்குறது.. சிஎஸ்கேவ பாத்து கத்துக்கோங்க.. லக்னோ உரிமையாளரால் எழுந்த சர்ச்சை..

-Advertisement-

லக்னோ அணிக்கு அடுத்த சில சீசன்களிலேயே மறக்க முடியாத ஒரு போட்டியாக ஹைதராபாத்திற்கு எதிராக தற்போது நடந்து முடிந்த போட்டி அமைந்துள்ளது. இந்த சீசனில் 200 ரன்களை அடித்தால் கூட அனைத்து அணிகளும் எளிதாக வெற்றி பெற்று வரும் நிலையில் இவர்களுக்கெல்லாம் ஆசானாக இருந்து வருகிறது சன்ரைசஸ் ஹைதராபாத் அணி.

டிராவிஸ் ஹெட், மற்றும் அபிஷேக் சர்மா என இரண்டு ஆபத்தான அதிரடி பேட்ஸ்மேன்கள் காரணமாக பவர் பிளேவிலேயே இரண்டு முறை 100 ரன்களை கடந்துள்ளனர். இவர்கள் நிலைத்து நின்று விட்டால் 300 ரன்கள் தொடுவதே ஹைதராபாத் அணிக்கு எளிதான விஷயமாக இருக்கும் இந்த சீசனில் தான் தற்போது நடந்து முடிந்த லக்னோவிற்கு எதிரான போட்டியிலும் கூட சில முக்கியமான சாதனைகளை அடித்து நொறுக்கி தங்கள் வசமாக்கியுள்ளனர்.

முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி மிகக் கடினமாக ஆடித்தான் 20 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்திருந்தனர். அப்படி ஆடிய லக்னோவின் மீது கொஞ்சம் கூட பாவம், பரிதாபம் பார்க்காத ஹைதராபாத் அணி முதல் ஓவரிலிருந்து சிக்ஸர் ஃபோர்களை பறக்க விட்டது. ஹெட் மற்றும் அபிஷேக் ஆகியோர் இணைந்து லக்னோ அணியின் பந்துவீச்சாளர்களை கொஞ்சம் கூட சிந்திக்க நேரம் கொடுக்காமல் அடித்து புதைத்துக் கொண்டிருக்க பத்தாவது ஓவர் முடிவுக்குள்ளாகவே போட்டியும் முடிந்து விட்டது.

160 க்கும் மேற்பட்ட ரன்கள் என்பது பத்து ஓவர்களில் தொட்டது அசாத்திய சாதனையாக செய்துள்ள ஹைதராபாத் அணியால் லக்னோ அணியின் கேப்டன் ராகுல் மற்றும் சக வீரர்கள் உடைந்து தான் போய் உள்ளனர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த வெற்றியின் காரணமாக புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ள அதே வேளையில் 12 போட்டிகள் ஆடி முடித்துள்ள லக்னோ அணி 12 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

-Advertisement-

இதனால் இனிவரும் இரண்டு போட்டிகளிலுமே அவர்கள் வெற்றி பெற்றால் தான் பிளே ஆப் முன்னேற முடியும் என்ற சூழலில் மிகவும் நெருக்கடியான நிலையிலும் உள்ளனர். ஐபிஎல் போட்டியிலேயே இப்படி ரன்களை வாரி கொடுத்த ஒரு போட்டியாக தற்போது மாறி உள்ளதால் லக்னோ அணியின் ரசிகர்களும் வேதனையிலும், விரக்தியிலும் தான் உள்ளனர்.

அப்படி ஒரு சூழலில் நான் லக்னோவின் உரிமையாளரான சஞ்சீவ் கோயிங்கா போட்டி முடிந்த பின்னர் கேப்டன் கே எல் ராகுலிடம் ஏதோ கோபமாக பேசுவது போன்ற வீடியோ வைரலாகி ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது. போட்டி முடிந்த பின் ட்ரெஸ்ஸிங் ரூமில் தான் இது பற்றிய விவாதங்கள் நடக்கும் நிலையில் மைதானத்திற்கு அருகிலேயே வைத்து ஒரு அணியின் உரிமையாளர் என்ற தோணியில் சஞ்சீவ் கோயிங்கா ராகுலிடம் ஏதோ கோபமாக, இந்த தோல்வியால் விரக்தி அடைந்தது போன்று பேசி இருந்தார்.

மற்ற அணியின் உரிமையாளர்கள் தோற்றாலும் அணி வீரர்களை தேற்றி வரும் நிலையில், அவர் இப்படி பேசியதை கொஞ்சம் கூட ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு சர்வதேச வீரரிடம் இப்படியா கோபப்பட்டு பேசுவது என அதிகாரமாக பேசியிருந்த சஞ்சீவ் கோயிங்கா மீது விமர்சனங்களும் அதிகமாக உள்ளது.

-Advertisement-

சற்று முன்