- Advertisement -
Homeகிரிக்கெட்பட்லர் இல்ல, அவரு சிக்ஸ் அடிச்சப்போ தான் ஜெயிப்போம்னு நம்பிக்கை வந்துச்சு.. மனம் திறந்த சஞ்சு...

பட்லர் இல்ல, அவரு சிக்ஸ் அடிச்சப்போ தான் ஜெயிப்போம்னு நம்பிக்கை வந்துச்சு.. மனம் திறந்த சஞ்சு சாம்சன்..

-Advertisement-

நடப்பு ஐபிஎல் தொடரில் ஆறு போட்டிகள் ஆடி இருந்த ராஜஸ்தான் அணி, குஜராத்திற்கு எதிராக மட்டும் தோல்வி அடைந்தது. மற்ற ஐந்து போட்டிகளில் லக்னோ, டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளை வீழ்த்தி இருந்த ராஜஸ்தான் புள்ளி பட்டியலிலும் முதலிடத்தை பிடித்திருந்தது. அவர்களுக்கு அடுத்தபடியாக கொல்கத்தா அணி இரண்டாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த இரண்டு அணிகளும் தான் ஐபிஎல் தொடரின் 31 வது போட்டியில் மோதி இருந்தது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியில் தொடக்க வீரர் சுனில் நரைன் சதம் அடித்து அசத்தியிருந்தார். தொடக்க வீரராக வந்து தனக்கு கிடைக்கும் பந்துகளை சிறப்பாக ஆடி வந்த நரைன், இந்த முறை நீண்ட நேரம் நின்று சதம் அடித்திருந்தார். அவருக்கு பக்கபலமாக ரகுவன்சி மற்றும் ரிங்கு சிங் ஆகியோரும் அதிரடி காட்டியதால் கொல்கத்தா அணி 223 ரன்கள் எடுத்திருந்தது.

கொல்கத்தா அணி இந்த முறை சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சூழலில் இதே தொடரில் 272 ரன்கள் குறித்து அனைவரையும் பிரமிக்க வைத்திருந்தனர். அதே போன்று அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்து 223 ரன்களையும் கொல்கத்தா அணி குக்குவிக்க, தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணி தொடக்கத்திலிருந்து அதிரடியாக ஆடி ரன் சேர்த்தாலும் 50 ரன்கள் சேர்ப்பதற்குள் இரண்டு முக்கிய விக்கெட்டுகளையும் இழந்திருந்தது.

நடுவே மீண்டும் சில விக்கெட்டுகள் விழ, தொடக்க வீரர் பட்லர் நிலைத்து நின்று ஆடி ரன் சேர்த்தார். கைவசம் 3 விக்கெட்டுகள் இருக்க, ராஜஸ்தான் அணிக்கு கடைசி 2 ஓவர்களில் 28 ரன்கள் தேவைப்பட, பட்லர் தனியாளாக நின்று அனைத்து பந்துகளையும் சந்தித்து கடைசி பந்தில் சிங்கிளுடன் வெற்றி பெற செய்திருந்தார். ஐபிஎல் தொடரில் சிறந்த சேசிங்காகாவும் இது மாறி இருந்தது.

-Advertisement-

தனி ஆளாக பட்லர் போராடி எதிர்பாராத இந்த வெற்றியை பற்றி பேசியிருந்த ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், “இந்த வெற்றி அதிக மகிழ்ச்சியை தருகிறது. ஆறு விக்கெட்டுகள் சென்ற பின்னர் திடீரென ரோமன் போவெல் களமிறங்கி இரண்டு சிக்ஸர்களை அடித்த சமயத்தில் தான் இன்னும் போட்டி எங்கள் பக்கம் இருக்கிறது என்பதை உணர்ந்தேன்.

இது ஒரு சிறந்த கம்பேக்காக இருப்பதுடன் மட்டுமில்லாமல் அதிர்ஷ்டமும் கைகூடி இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். கொல்கத்தா அணியின் வீரர்களும் சிறப்பாக தான் ஆடி இருந்தனர். சுனில் நரைன் மற்றும் வருண் சக்கரவர்த்தி என இரண்டு தரமான சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டு சிறப்பாகவும் செயல்பட்டிருந்தனர்.

கடந்த ஆறு முதல் ஏழு ஆண்டுகளாக ராஜஸ்தான் அணிக்காக பட்லர் என்ன செய்து கொண்டிருக்கிறாரோ அதனை தான் தற்போதும் அவர் செய்து முடித்துள்ளார். சேசிங்கில் தொடக்க வீரராக களம் இறங்கி ஜோஸ் பட்லர் கடைசி ஓவர் வரை நிற்கிறார் என்றால் நிச்சயம் அது அவரால் எட்ட முடியாத இலக்காக இருக்காது. அவர் ஒரு ஸ்பெஷலான வீரர்” என தெரிவித்துள்ளார்.

-Advertisement-

சற்று முன்