- Advertisement -
Homeகிரிக்கெட்கேரளால எங்க போனாலும் அந்த பையன பத்தி தான் கேட்குறாங்க.. வெற்றிக்கு பின் உற்சாகமான சாம்சன்..

கேரளால எங்க போனாலும் அந்த பையன பத்தி தான் கேட்குறாங்க.. வெற்றிக்கு பின் உற்சாகமான சாம்சன்..

-Advertisement-

ஐபிஎல் போட்டிகளில் ஒவ்வொரு போட்டியும் முடியும் தருவாயில் எந்த அணி பிளே ஆஃப் முன்னேறும் என்பதை அறிந்து கொள்ள முடியாத நிலை தான் இருக்கும். ஒரு போட்டியில் அபாரமாக ஆடி வெற்றி பெறும் அணி, அடுத்த போட்டியில் ஏதாவது ஒரு விஷயத்தில் சொதப்பி தோல்வி அடையவும் செய்கிறது. ஐபிஎல் தொடரும் தற்போது நடந்து வரும் நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்தது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பாக ஆடாமல் அவுட்டான சமயத்தில் ரியான் பராக், அஸ்வின் உள்ளிட்டோர் சிறப்பான பங்களிப்பை அளித்ததன் காரணமாக அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்திருந்தது.

இளம் வீரர் ரியான் பராக் ஆட்டம், கடந்த சீசனில் அதிக விமர்சனத்தை சந்தித்த நிலையில் இந்த சீசனில் ராஜஸ்தான் அணி ஆடிய இரண்டு போட்டிகளில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்திருந்தார். அதிலும் குறிப்பாக டாப் ஆர்டர் வீரர்கள் ரன் சேர்க்காத நிலையல் தனி ஆளாக போராடிய அவர் கடைசி ஓவரில் 25 ரன்கள் அடித்ததுடன் மொத்தம் 45 பந்துகளில் 84 ரன்கள் சேர்த்திருந்தார்.

அவரது உதவியால் சிறந்த ஸ்கோரை ராஜஸ்தான் அணி எட்டிய நிலையில் தொடர்ந்து ஆடிய டெல்லி அணி, சிறப்பான தொடக்கத்தை கொடுத்திருந்தது. ஆனாலும் பின்னர் அவர்களால் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் போக, கடைசி கட்டத்தில் ஸ்டப்ஸ் மட்டும் அதிரடி காட்டி இருந்தார். அதுவும் அவர்களுக்கு கை கொடுக்காமல் போக, 20 ஓவர்கள் முடிவில் 173 ரன்களையே டெல்லியால் அடிக்க முடிந்தது. இதனால், ராஜஸ்தான் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்த தொடரின் 2 வது வெற்றியையும் ருசித்துள்ளது.

-Advertisement-

இந்த வெற்றிக்கு பின்னர் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பேசுகையில், “இது ஒரு ரோலர் கோஸ்டர் பயணம் போல இருந்தது. முதல் 10 ஓவர்கள் நாங்கள் பேட்டிங் செய்த போது ரோவ்மேன் பொவல் ஆட வேண்டுமென நினைத்தேன். ஆனால், அதன் பின்னர் பேட்ஸ்மேன்கள் பொறுப்பு உணர்ந்து அற்புதமாக ஆடி இருந்தனர். முன்பு எல்லாம் 11 வீரர்கள் ஆடுவார்கள். ஆனால் இப்போது 15 வீரர்கள் ஆடும் நிலைமை உள்ளது .

சங்கக்காராவும் நானும் 13 முதல் 17 ஓவர்களுக்கு இடையே நான்கு ஐந்து முறை உரையாடினோம். ஆனால் 20 வது ஓவரில் ரியான் பராக் செய்த விஷயம் அனைத்தையும் எளிதாக்கியது. ரியானுடைய பெயர் கடந்த 4 முதல் 5 ஆண்டுகளாக பெரிதாகவே உள்ளது. கேரளாவில் நான் எங்கே போனாலும் அவர் எப்போதும் ஃபார்முக்கு வருவார் என்றே கேட்டனர். அது இந்த சீசன் தான் என உணர்கிறேன். அவர் தலை குனிந்து இந்திய கிரிக்கெட்டிற்காக நிறைய கொடுக்க வேண்டும்” என சஞ்சு சாம்சன் கூறி உள்ளார்.

-Advertisement-

சற்று முன்