- Advertisement -
Homeகிரிக்கெட்சேசிங்ல நாங்க ஈஸியா ஜெயிக்க காரணம்.. மும்பையின் வீக்னஸ்.. ரகசியம் உடைத்த சஞ்சு சாம்சன்..

சேசிங்ல நாங்க ஈஸியா ஜெயிக்க காரணம்.. மும்பையின் வீக்னஸ்.. ரகசியம் உடைத்த சஞ்சு சாம்சன்..

-Advertisement-

முந்தைய சீசன்களை போல இந்த முறையும் ராஜஸ்தான் அணி பலம் வாய்ந்து விளங்கும் நிலையில் கடந்த சீசனில் செய்த தவறுகளை எல்லாம் மீண்டும் ஒருமுறை செய்யாமல் நிச்சயம் இந்த முறை பிளே ஆப் முன்னேறி கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக திகழும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை 8 போட்டிகளில் ஆடி உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, அதில் 7 போட்டிகளில் வென்று புள்ளி பட்டியலில் முதலிடத்திலும் உள்ளனர். குஜராத்துக்கு எதிராக நடந்த ஒரே ஒரு போட்டியில் மட்டும் தோல்வி அடைந்த ராஜஸ்தான் அணி மற்ற அனைத்து அணிகளையுமே ஒரு கை பார்த்துவிட்டது என சொல்லலாம்.

இன்னும் 6 போட்டிகள் அவர்களுக்கு மீதம் இருப்பதால் ஒன்றிரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றாலே பிளே ஆப் சுற்றையும் உறுதி செய்துவிடலாம் என்ற நிலை தான் உள்ளது. இதனிடையே சமீபத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் அவர்கள் தங்களது லீக் போட்டியில் சந்தித்திருந்தனர். இந்த போட்டியில் மும்பை அணி 180 ரன்கள் இலக்கை கொடுக்க அதனை நோக்கி ஆடிய ராஜஸ்தான், எந்தவித நெருக்கடியும் இன்றி எளிதாக ஆடி 19 வது ஓவரிலேயே எட்டிப்பிடித்து இருந்தது.

ஒரு விக்கெட் மட்டுமே இழந்த ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் சதமடித்து தனது ஃபார்மை மீண்டும் நிரூபித்துள்ளது அந்த அணிக்கு மற்றொரு சாதகமாகவும் பார்க்கப்படுகிறது. மீண்டும் ஒரு அபார வெற்றிக்கு பின் பேசியிருந்த ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், “அனைத்து வீரர்களுக்குமே இந்த வெற்றிக்கான பங்கு உள்ளது. பவர் பிளேவில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் மும்பையின் இடதுகை பேட்ஸ்மேன்கள் நம்ப முடியாத வகையிலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

-Advertisement-

ஆனால் அப்படி இருந்தும் போட்டியில் நாங்கள் திரும்பி வந்த போது எங்கள் வெற்றியையும் உறுதி செய்து விட்டோம். பிட்ச் முதலில் மிக உலர்ந்து போயிருந்தது. ஆனால் வெளிச்சம் வந்த பின்னர் இரவிலும் சற்று பனி வந்து விட்டதால் இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்யவும் எளிதாக இருந்தது.

ஜெய்ஸ்வாலுக்கு எந்த வித அறிவுரையும் தேவையில்லை என்று நான் நினைக்கிறேன். அவர் மிகவும் தன்னம்பிக்கையுடன் ஆடி உள்ளார். அவர் ஒரு போட்டியில் தான் ஃபார்முக்கு வந்துள்ளார் என்றாலும் மிக அமைதியாக அவர் ஆடிய ஆட்டம் மகிழ்ச்சியையும் தருகிறது” என சஞ்சு சாம்சன் கூறினார்.

-Advertisement-

சற்று முன்