- Advertisement 3-
Homeவிளையாட்டுடி 20 உலக கோப்பையில இடம்பிடிக்க இப்படி ஒரு டெக்னிக்கா.. அதிரடி திட்டத்தை கையிலெடுத்த சாம்சன்..

டி 20 உலக கோப்பையில இடம்பிடிக்க இப்படி ஒரு டெக்னிக்கா.. அதிரடி திட்டத்தை கையிலெடுத்த சாம்சன்..

- Advertisement 1-

சமீபகாலமாக, சர்வதேச இந்திய அணியில் ஒரு வீரர் இடம்பிடிப்பதே மிகுந்த சவாலான ஒன்றாக மாறி விட்டது. ஐபிஎல், முதல் தர போட்டி மற்றும் ரஞ்சி கோப்பை என அனைத்திலுமே ஏராளமான இளம் வீரர்கள் துடிப்புடன் செயல்பட்டு வருவதால் அவர்களின் மீதான கவனமும் பிசிசிஐ சார்பில் உடனடியாக பட்டு விடுகிறது. இதனால், இரு தரப்பு தொடர்கள் தொடங்கி உலக கோப்பை என முக்கியமான தொடர்களிலும் கூட இந்திய அணியில் இளம் வீரர்கள் நிரம்பி கிடக்கின்றனர்.

இது மட்டுமில்லாமல், இன்று நிதானமாக ஆடும் டெஸ்ட் போட்டியில் கூட அதிரடியாக ஆடி ரன் சேர்க்கும் இளம் வீரர்கள் அதிகம் இடம்பெற்று வருவது ஒரு பக்கம் பாராட்டுக்களை பெற்றாலும் இன்னொரு பக்கம் விமர்சனத்தை சந்திக்காமலும் இல்லை. இளம் வீரர்கள் காரணமாக பல அனுபவம் வாய்ந்த டெஸ்ட் வீரர்கள் இந்திய அணியில் இருந்து காணாமலே போய் விட்டார்கள்.

இது ஒரு புறம் இருக்க, இன்னொரு புறம் தொடர்ந்து தங்களின் திறனை ஐபிஎல் உள்ளிட்ட தொடர்களில் வெளிப்படுத்தி வரும் ஒரு சில சிறந்த வீரர்களுக்கே இந்திய அணியில் வாய்ப்புகள் புறக்கணிக்கப்பட்டு தான் வருகிறது. அந்த லிஸ்டில் முக்கியமான ஒருவர் தான் சஞ்சு சாம்சன். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை தலைமை தாங்கி வரும் சாம்சன், பல தொடர்களில் சிறப்பாக ஆடிய போதிலும் அவர் இந்திய அணியில் தேர்வு செய்யப்படாமல் மற்ற வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது.

இவரை இரு தரப்பு தொடர்களில் தேர்வு செய்து விட்டு, அதில் ஒன்றிரண்டு போட்டிகளில் மட்டுமே வாய்ப்பை கொடுத்து அதில் சிறப்பாக ஆடாமல் போனால் பின்னர் அடுத்தடுத்த தொடர்களில் சஞ்சு சாம்சனுக்கான வாய்ப்பும் மறுக்கப்பட்டே தான் வந்தது. தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் இந்நேரம் இந்திய அணியின் தவிர்க்க முடியாத பேட்ஸ்மேனாக சஞ்சு சாம்சன் உயர்ந்திருப்பார் என கிரிக்கெட் பிரபலங்கள் தொடங்கி ரசிகர்கள் வரை தெரிவித்து வந்தனர்.

- Advertisement 2-

இதனிடையே, சஞ்சு சாம்சன் அதிக பலமாக இருக்கும் டி 20 போட்டிகளின் அடிப்படையில் இந்த ஆண்டு நடைபெற உள்ள டி 20 உலக கோப்பையில் அவரை நிச்சயம் தேர்வு செய்ய வேண்டும் என்றும் பலர் கோரிக்கை வைத்து வருகின்றனர். அப்படி இல்லை என்றாலும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக பேட்டிங் செய்து இந்திய அணியின் தேர்வாளர்கள் கவனத்தை தன் பக்கம் அவர் ஈர்ப்பார் என்றும் தெரிகிறது.

இந்த நிலையில், சஞ்சு சாம்சன் தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பையில் பந்து வீசிய சம்பவம், அதிகம் வைரலாகி வருகிறது. கேரள அணிக்காக ஆடி வரும் இவர், இரண்டாவது முறையாக ரஞ்சி தொடரில் பந்து வீசினார். ஒரே ஓவர் வீசிய இவர், விக்கெட் எதுவும் எடுக்காமல் 11 ரன்களை கொடுத்தார். இதனை கவனித்த ரசிகர்கள், டி 20 உலக கோப்பையில் எப்படியாவது இடம்பிடிக்க தற்போது பவுலிங் பயிற்சியும் சஞ்சு சாம்சன் மேற்கொண்டு வருகிறார் என வேடிக்கையாகவும் தெரிவித்து வருகின்றனர்.

சற்று முன்