- Advertisement -
Homeகிரிக்கெட்இதை மட்டும் பண்ணாலே இந்தியா ஈஸியா ஜெயிக்கலாம்.. அரையிறுதிக்கு முன்னர் - ஷேன் வாட்சன் அட்வைஸ்

இதை மட்டும் பண்ணாலே இந்தியா ஈஸியா ஜெயிக்கலாம்.. அரையிறுதிக்கு முன்னர் – ஷேன் வாட்சன் அட்வைஸ்

-Advertisement-

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியானது இன்று நவம்பர் 15-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. மேலும் கடந்த 2019-ஆம் ஆண்டு இந்திய அணி அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணிக்கெதிராக தான் தோல்வியை சந்தித்து சென்ற முறை இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்திருந்தது.

அதற்கு பழி தீர்க்கும் வகையில் இம்முறை அவர்களை வீழ்த்தி சொந்த மண்ணில் கோப்பையை கைப்பற்ற இந்திய அணி முயற்சிக்கும் என்பதனாலும் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் இந்த அரையிறுதி போட்டிக்கு முன்னதாக பல்வேறு முன்னாள் வீரர்களும் இந்த போட்டி குறித்த தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான ஷேன் வாட்சன் இந்த அரையிறுதி போட்டி குறித்து கூறுகையில் : இந்திய அணி லீக் போட்டிகளில் எவ்வாறு நியூசிலாந்து அணி எதிர்கொண்டதோ அதேபோன்று இந்த அரையிறுதி போட்டியிலும் எதிர்கொள்ள வேண்டும். ஏனெனில் அரையிறுதி போட்டிக்காக புதிதாக எதையோ முயற்சித்து அழுத்தத்தை தங்கள் மீது போட்டுக் கொள்ளக் கூடாது.

-Advertisement-

சாதாரணமாக அவர்கள் இயல்பான கிரிக்கெட்டை விளையாடியது போன்று விளையாடினாலே அரையிறுதி போட்டியிலும் வெற்றி பெறலாம். இது நாக்கவுட் போட்டி மிக முக்கியமான போட்டி என்ற அழுத்தங்கள் எதுவும் இல்லாமல் சாதாரணமாக விளையாட வேண்டும்.

தற்போதுள்ள இந்திய அணி மிக வலுவான அணியாக உள்ளது. எனவே அவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் விளையாடினால் எளிதில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் அதோடு அரையிறுதியை கடந்து இந்திய இறுதிப்போட்டிக்கு முன்னேறும் பட்சத்தில் அந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக ஷேன் வாட்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்