- Advertisement -
Homeகிரிக்கெட்வருணுக்கு கடைசி ஓவர் கொடுக்க காரணம் இதான்.. பட்லர் அவங்கள ஜெய்க்க வெச்சாலும்.. உறுதியுடன் ஷ்ரேயஸ்...

வருணுக்கு கடைசி ஓவர் கொடுக்க காரணம் இதான்.. பட்லர் அவங்கள ஜெய்க்க வெச்சாலும்.. உறுதியுடன் ஷ்ரேயஸ் ஐயர்..

-Advertisement-

கொல்கத்தா அணிக்கு கம்பீரின் கம்பேக் ஒன்று போதும் அந்த அணி தற்போது ஆடி வரும் ஆட்டத்தின் காரணம் என்ன என்பதை நிரூபிப்பதற்கு. அந்த ஒரு நபரின் வருகையால் கொல்கத்தா அணியே ஒரு புத்துணர்ச்சியை பெற்றதுடன் மட்டுமில்லாமல் ஒரு எதிரணியினர் அஞ்சும் அளவுக்கான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி வருகிறது. சீனியர் வீரர்கள் தொடங்கி இளம் வீரர்கள் வரை கொல்கத்தா அணியில் இடம் பெற்று நல்ல ஒரு பங்களிப்பை அளித்து வரும் நிலையில் இவர்களின் பின்னால் கம்பீரும் இருந்து வருகிறார்.

இதன் காரணமாக புள்ளி பட்டியலிலும் ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கும் கொல்கத்தா அணி, சென்னை அணிக்கு எதிராக மட்டும் தான் தோல்வி அடைந்துள்ளது. சுனில் நரைன், ரசல், ரகுவன்சி, பிலிப் சால்ட் என அனைத்து வீரர்களுமே தங்களுக்கு கிடைக்கும் பந்துகளை பவுண்டரிகளாக மாற்றும் திறன் படைத்துள்ள நிலையில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக தற்போது நடந்த போட்டியில் சுனில் நரைன் சதம் அடித்து அனைவரையும் மிரள வைத்தார்.

500 போட்டிகளுக்கு மேல் ஆடி உள்ள சுனில் நிறைய டி20 போட்டிகள் அடித்த முதல் சதம் இதுவாகும். இதனால் கொல்கத்தா அணியும் தலை நிமிர்ந்து 223 ரன்கள் சேர்த்திருந்தது. இந்த நிலையில், தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணியும் பவர் பிளே முடிவதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 76 ரன்கள் எடுத்திருந்தது.

ஆனால், ரியன் பராக் அவுட்டான பின்னர், ராஜஸ்தான் அணியின் விக்கெட்டுகள் விழ தொடங்க, 14 வது ஓவருக்கு பிறகு, பட்லர் மற்றும் போவெல் ஆகியோர் சிறிய நம்பிக்கையை கொடுத்திருந்தனர். ஆனாலும், நரைன் பந்தில் 26 ரன்கள் எடுத்திருந்த போவெல் அவுட்டாக, மீண்டும் நிலை மாறியது.

-Advertisement-

இறுதியில், ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் பட்லர் தனியாளாக போராடி, வெற்றியை ராஜஸ்தான் பக்கம் திருப்பி இருந்தார். 3 ஓவர்களில் தனியாளாக 40 ரன்களுக்கு மேல் சேர்த்து சதமடித்ததுடன் ராஜஸ்தான் வெற்றியை கடைசி பந்தில் உறுதி செய்திருந்தார்.

இந்த எதிர்பாராத தோல்விக்கு பின் பேசியிருந்த கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், “நிச்சயமாக நாங்கள் இப்படி ஒரு சூழ்நிலையில் எட்டுவோம் என நினைத்து பார்க்கவில்லை. போட்டியின் கடைசியில் பட்லர் மிகச் சிறப்பாக பந்துகளை துல்லியமாக டைமிங் செய்து அடித்திருந்தார். நீங்கள் சிறப்பான பந்துகளை வீசி அது சற்று மிஸ்ஸாகி, பவுண்டரிகளுக்கு செல்வது கடைசி கட்ட போட்டிகளில் நடைபெறுவதை விட தொடரின் இந்த சமயத்தில் நடைபெறுவது நல்லது தான். மேலும் எங்களுக்கு இது ஒரு சிறந்த பாடமாகவும் மாறி உள்ளது.

அதேபோல சுனில் நரைன் கொல்கத்தா அணியின் சொத்தாக இருப்பதுடன் அதனை ஒவ்வொரு போட்டியிலும் நிரூபித்து வருகிறார். அவர் எங்கள் அணியில் இருப்பதே பெருமையாக தான் உள்ளது. பட்லர் தொடர்ந்து அடித்துக் கொண்டே இருந்ததால் தான் வேகப்பந்து வீச்சினை மாற்றிவிட்டு வருண் சக்கரவர்த்திக்கு கடைசி ஓவரை கொடுத்தேன்.

அது மட்டுமில்லாமல் 5 ஃபீல்டர்கள் உள்ளே நின்றதால் அதிக நெருக்கடியும் இருந்தது. அப்படி இருக்கும்போது பந்தை சரியாக எங்கே வீச வேண்டும் என்பதும் தெரியாமல் தான் இருக்கும். எங்களின் தவறுகளில் இருந்து சரி செய்து கொண்டு மீண்டு வருவதே மிக முக்கியமான ஒன்று. சில ஓவர்கள் அங்குமிங்கமாக நன்றாக வீசினோம். ஆனாலும் எங்கள் அணியின் வீரர்களின் நினைத்து பெருமையாகத்தான் உள்ளது” என ஷ்ரேயஸ் கூறியுள்ளார்.

-Advertisement-

சற்று முன்