- Advertisement 3-
Homeவிளையாட்டுகாசுக்காக இப்படி ஒரு முடிவா.. தெ. ஆ அணி எடுத்த சர்ச்சை முடிவு.. 50 வருஷம்...

காசுக்காக இப்படி ஒரு முடிவா.. தெ. ஆ அணி எடுத்த சர்ச்சை முடிவு.. 50 வருஷம் கழிச்சு இப்படி நடக்க போகுது..

- Advertisement 1-

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அற்புதமாக ஆடி வரும் தென்னாபிரிக்க அணி, மற்றொரு சிறப்பான புகழை தங்கள் பக்கமே தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதாவது தெ. ஆ மண்ணில் இதுவரை இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்பது தான் அது. தோனி, கோலி உள்ளிட்ட பல கேப்டன்கள் தெ. ஆ மண்ணில் இந்திய அணியை தலைமை தாங்கி இருந்த போதிலும் அவர்களால் டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடியாமல் போனது.

இதனையடுத்து, அபாயகரமான படையாக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தெ. ஆ அணியை எதிர்த்து ஆடியது இந்திய அணி. இதன் முதல் போட்டியிலேயே எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் படுதோல்வி அடைந்திருந்தது இந்திய கிரிக்கெட் அணி. இதனால், தொடரை வெல்லும் வாய்ப்பும் அவர்களுக்கு பறிபோக, டெஸ்ட் தொடரில் தாங்கள் கிங் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது தெ. ஆ அணி.

இந்திய அணிக்கு தற்போதுள்ள ஒரே ஒரு நம்பிக்கை, ஜனவரி 3 ஆம் தேதியன்று ஆரம்பமாகும் 2 வது டெஸ்ட் போட்டியை வெல்ல வேண்டும் என்பது மட்டும் தான். அதற்காக கேப்டன் ரோஹித் ஷர்மாவும் மிக தீவிரமாக தனது அணியினருடன் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிவடைந்த பின், நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது தெ. ஆ அணி.

ஆனால், இது தொடர்பான செய்திகள் தான் தற்போது ஒட்டுமொத்த கிரிக்கெட் பிரபலங்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக தெ. ஆ அணி வீரர்கள் பட்டியலை வெளியிட்டிருந்தது. இதில் சுமார் 7 பேர் வரை அறிமுக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும் இந்திய அணிக்கான டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருந்த 3 வீரர்கள் மட்டும் தான் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற்றுள்ளனர்.

- Advertisement 2-

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான போட்டி என்ற போதிலும் தெ. ஆ அணி இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஜனவரி மாதத்தில் SA 20 லீக் தொடர் தென்னாப்பிரிக்காவில் ஆரம்பமாகிறது. மார்க்ரம், மில்லர் உள்ளிட்ட தெ. ஆ அணியின் பல முன்னாள் வீரார்கள் இந்த தொடரில் ஆடுவதால் முதல் தர போட்டிகளில் சிறப்பாக ஆடி வரும் சர்வதேச போட்டிகளில் அறிமுகம் இல்லாத வீரர்களை நியூசிலாந்து அணிக்கு எதிராக ஆட வைக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

அதிலும் மற்றொரு ஆச்சரியமாக, இதுவரை ஒரு சர்வதேச போட்டியில் கூட ஆடாத நெய்ல் ப்ராண்ட் என்ற இளம் வீரர் தான் இந்த டெஸ்ட் தொடரின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு அணியை தலைமை தாங்கும் வாய்ப்பு ஒரு அறிமுக வீரருக்கு கிடைத்துள்ளது தற்போது கிரிக்கெட் உலகில் பெரிய விஷயமாக பார்க்கப்பட்டு வருகிறது.

சற்று முன்