- Advertisement -
Homeகிரிக்கெட்அடுத்து விராட் கோலி தான் டார்கெட்.. முன்னணி பேட்ஸ்மேன்களுக்கே பயம் காட்டிய நரைன்..

அடுத்து விராட் கோலி தான் டார்கெட்.. முன்னணி பேட்ஸ்மேன்களுக்கே பயம் காட்டிய நரைன்..

-Advertisement-

ஐபிஎல் வரலாற்றிலேயே இந்த தொடர் தான் அதிரடி ஆட்டத்தின் பொற்காலம் என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு கையில் கிடைக்கும் பந்துகளை எல்லாம் அடித்து நொறுக்கிக் கொண்டு இருக்கின்றனர் அனைத்து அணிகளிலும் ஆடிவரும் பேட்ஸ்மேன்கள். சில அணிகள் இந்த தொடரில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்தாலும் ஏதாவது ஒரு சில வீரர்கள் நல்லதொரு பங்களிப்பை தொடர்ந்து அளித்து வருகின்றனர்.

அதற்கு சிறந்த ஒரு உதாரணமாக பெங்களூரு அணியில் ஆடி வரும் விராட் கோலியை சொல்லலாம். இது தவிர சென்னை அணியில் ருத்துராஜ், சிவம் துபே உள்ளிட்ட வீரர்களும் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் ஷர்மா, திலக் வர்மா உள்ளிட்ட வீரர்கள் தொடர்ந்து நல்ல பங்களிப்பை தங்களின் பேட்டிங் மூலம் அளித்து வரும் நிலையில் கொல்கத்தா அணிக்காகவும் அப்படி ஒரு வீரராக இருப்பவர் தான் சுனில் நரைன்.

சிறந்த ஒரு தொடக்க வீரராக தற்போது உருவெடுத்துள்ள சுனில் நரைன், கௌதம் கம்பீர் மீண்டும் கொல்கத்தா அணியில் ஆலோசகராக இணைந்ததன் பின்னர் அந்த அணி வலுப்பெற்றதுடன் மட்டுமில்லாமல் மீண்டும் பழைய சில யுக்திகளையும் கையாண்டு வருகிறார். அதில் முக்கியமான ஒன்று தான் சுனில் நரைனை தொடக்க வீரராக களமிறங்க வைத்தது.

சுழற்பந்து வீச்சாளரான் சுனில் நரைன், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிராக தொடக்க வீரராக களமிறங்கி ஆட ஆரம்பித்ததன் பின்னர் தற்போது ஒரு முழு நேர பேட்ஸ்மேனாகவே மாறிவிட்டார் என்று கூட சொல்லலாம். ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற பலம் பொருந்திய அணிக்கு எதிராக தனது முதல் டி 20 சதத்தை அடித்திருந்த சுனில் நரைன், இரண்டு அரை சதங்களையும் அடித்துள்ளார்.

-Advertisement-

அவர் சொற்ப ரன்களில் அவுட்டானால் கூட கொல்கத்தா அணியின் பவர் பிளே ஸ்கோருக்கு மிகப் பெரிய அளவிலான தாக்கத்தையும் அவை உண்டு பண்ணி விடுகிறது. பந்து வீச்சிலும் இதுவரை 9 விக்கெட்டுகள் கைப்பற்றி உள்ள சுனில் நரைன், கொல்கத்தா அணிக்கு தேவைப்படும் நேரத்தில் சில முக்கியமான விக்கெட்டுகளையும் எடுத்து கொடுத்துள்ளார்.

இப்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கிடைத்த பொக்கிஷமாக பார்க்கப்படும் சுனில் நரைன், நடப்பு ஐபிஎல் சீசனில் செய்துள்ள மற்றொரு முக்கியமான சம்பவம் தான் பலரையும் மிரண்டு போக வைத்துள்ளது. 8 போட்டிகள் ஆடியுள்ள சுனில் நரைன், தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சேர்த்த 71 ரன்களுடன் 357 ரன்கள் சேர்த்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட்டும் 180-க்கு மேல் உள்ள நிலையில், அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் 2 ஆம் இடத்திற்கும் முன்னேறி உள்ளார்.

இவருக்கு முன்பாக, விராட் கோலி 430 ரன்கள் எடுத்துள்ள நிலையில், விரைவில் அதனையும் முறியடித்து நரைன் முதலிடத்திற்கு வருவார் என்றும் தெரிகிறது. பேட்ஸ்மேன்கள் பலர் இருந்தும் அவர்களை எல்லாம் தாண்டி நரைன் ரன் குவித்து வருவது பலரையும் ஆச்சாரியப்படுத்தி உள்ளது என்றே சொல்லலாம்.

-Advertisement-

சற்று முன்