- Advertisement -
Homeகிரிக்கெட்ரோஹித் அவுட்டானதும் முடிவு பண்ணிட்டேன்.. பஞ்சாபை வீழ்த்த ஒரு நாள் முன்பே போட்ட பிளான்..

ரோஹித் அவுட்டானதும் முடிவு பண்ணிட்டேன்.. பஞ்சாபை வீழ்த்த ஒரு நாள் முன்பே போட்ட பிளான்..

-Advertisement-

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆரம்பத்தில் ஐபிஎல் தொடர்களில் ஆடி வந்த சூர்யகுமார் யாதவ், அதன் பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணியில் தேர்வாகி இருந்தார். கொல்கத்தா அணியில் என்ன செய்தாரோ அதைவிட ஒரு மடங்கு அதிகமான ஆட்டத்தை மும்பை அணிக்காக தற்போது வரை தொடர்ந்து ஆடி வரும் சூர்யகுமார் யாதவ், மெல்ல மெல்ல இந்திய சர்வதேச அணியிலும் இடம் பிடித்து டி20 போட்டிகளில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்து வருகிறார்.

அது மட்டுமில்லாமல் நடப்பு ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக முதல் மூன்று போட்டிகளில் களமிறங்காமல் இருந்து வந்த சூர்யகுமார் யாதவ், அடுத்த நான்கு போட்டிகளில் தொடர்ந்து ஆடி இருந்தார். அவர் ஆடிய நான்கு போட்டிகளில் தான் மும்பை அணி மூன்று போட்டிகளை வென்றிருந்தது. இன்னொரு பக்கம் சூர்யகுமாரின் பேட்டிங் ஃபார்மும் சற்று சுவாரசியம் நிறைந்ததாகவே உள்ளது.

இந்த சீசனில் தனது முதல் போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக டக் அவுட்டாகி இருந்த சூர்யகுமார், அடுத்த போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிராக 17 பந்துகளில் அரைச்சதம் அடித்து சாதனை புரிந்திருந்தார். தொடர்ந்து மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டக் அவுட் ஆனார்.

இதனையடுத்து சமீபத்தில் நடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் ஒருமுறை ஐம்பது ரன்களைக் கடந்த சூர்யகுமார் யாதவ், ஒவ்வொரு போட்டியை விட்டுவிட்டு சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். இது பற்றி தனது பேட்டிங் முடிந்த பின்னர் பேசி இருந்த சூர்யகுமார் யாதவ், “இப்படி ஆடும் போது உங்களின் ஆட்டத்தில் உள்ள ஏற்ற இறக்கங்களை பற்றி சரியாக எடுத்துரைக்கிறது. நான் நன்றாக பேட்டிங், ஃபீல்டிங் மற்றும் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறேன்.

-Advertisement-

இதனால் மெல்ல மெல்ல நான் நிச்சயம் 40 ஓவர்களிலும் ஆடுவேன் என எதிர்பார்க்கிறேன். பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டிக்கு முந்தைய நாள் இரவில் மும்பை பேட்ஸ்மேன்கள் அனைவரும் கூடி ஆலோசித்து இருந்தோம். அப்போது யாராவது ஒரு பேட்ஸ்மேன் 15 முதல் 17 ஓவர்கள் வரை பேட்டிங் செய்ய வேண்டும் என்று முடிவு செய்திருந்தோம்.

ஏனென்றால் இந்த மைதானத்தில் வலைப்பயிற்சி செய்தபோது ரன் அடிப்பதற்கு மிகவும் கடினமாக இருந்தது. ரோஹித் ஒரு கட்டத்தில் அவுட் ஆனதால் நான் கடைசி வரை நிற்க வேண்டும் என்ற நிலையும் இருந்தது” என சூர்யகுமார் கூறினார்.

-Advertisement-

சற்று முன்