- Advertisement -
Homeகிரிக்கெட்அப்போ ஹர்திக், இப்போ ஷிவம் துபே.. ஏமாந்த ரசிகர்கள்.. சைலண்டாக பிசிசிஐக்கு பதில் சொன்ன ருத்து..

அப்போ ஹர்திக், இப்போ ஷிவம் துபே.. ஏமாந்த ரசிகர்கள்.. சைலண்டாக பிசிசிஐக்கு பதில் சொன்ன ருத்து..

-Advertisement-

ஐபிஎல் சீசன்களை தாண்டி தற்போது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் கடந்த சில ஐபிஎல் போட்டிகளில் நடந்த விஷயங்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. டி20 உலக கோப்பைத் தொடர் வரும் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் வைத்து நடைபெற உள்ளது.

இதற்கான அட்டவணை மற்றும் தேதி, மைதானங்கள் உள்ளிட்ட விவரங்கள் ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில், சென்றமுறை ஒரு நாள் உலக கோப்பையைத் தவறவிட்ட அனைத்து அணிகளும் இந்த முறை டி20 உலக கோப்பையை எப்படியாவது வென்று விட வேண்டும் என்ற நோக்கத்திலும் தயாராகி வருகின்றனர்.

இதன் முதல் படியாக இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு அணிகள் தங்களின் உலக கோப்பை வீரர்கள் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணி கேப்டனாக ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். ஒரு பக்கம் ஷிவம் துபே, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன், சாஹல் உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டது ரசிகர் மத்தியில் பாராட்டுகளை பெற்றிருந்தாலும் இன்னொரு பக்கம் கே எல் ராகுல், ரிங்கு சிங், சந்தீப் ஷர்மா உள்ளிட்ட வீரர்கள் தேர்வாகாமல் போனது அதிக எதிர்ப்பையும் சம்பாதித்துள்ளது.

இப்படி பிசிசிஐ மற்றும் இந்திய தேர்வு குழு உறுப்பினர்கள் டி 20 உலக கோப்பைக்காக தேர்வு செய்துள்ள அணி பற்றிய தகவல் அதிக பேசு பொருளாக மாறி உள்ள நிலையில் இந்த அணி நிச்சயம் டி 20 உலக கோப்பையை வென்று சொந்தமாக்கும் என்றும் ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

-Advertisement-

அப்படி இருக்கையில் இந்திய அணி அறிவிக்கப்பட்ட இரண்டு நாட்களில் நடந்த சம்பவங்கள் ரசிகர்களை உடைந்து போக வைத்துள்ளது. மும்பை அணியில் இடம் பெற்றுள்ள ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் மற்றும் பும்ரா ஆகிய நான்கு பேரும் டி20 உலக கோப்பையில் இடம் பெற்றுள்ளனர். இதில் இவர்கள் லக்னோவுக்கு எதிராக ஆடி இருந்த போட்டியில் பேட்ஸ்மேன்களான சூர்யகுமார் 10 ரன்னிலும், ரோஹித் 4 ரன்னிலும் ஹர்திக் பாண்டியா கோல்டன் டக் அவுட்டாகி இருந்தார்.

இதனிடையே ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக அதிரடி ஆட்டமாடி பிசிசிஐ கவனத்தைப் பெற்றிருந்த ஷிவம் துபே, பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், கோல்டன் டக்காகி அதிர்ச்சி அளித்துள்ளார். இப்படி இந்திய அணி அறிவிக்கப்பட்ட பின்னர் அதில் இடம்பெற்றுள்ள வீரர்களின் பேட்டிங் ஏமாற்றமளித்து வரும் நிலையில், இதில் தேர்வாகாமல் போன சிஎஸ்கே கேப்டன் ருத்துராஜ், சிறப்பாக ஆடி 62 ரன்கள் எடுத்து கோலியின் ரன்னை முந்தி ஆரஞ்ச் கேப்பையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்