- Advertisement 3-
Homeவிளையாட்டுகளத்துல சிரிக்கறதா அம்பயரோட வேல? தோனி நடுவர்கள கவர்றாரு. இந்த சமயத்துல உடனே அம்பயர்கள் நிலமையைக்...

களத்துல சிரிக்கறதா அம்பயரோட வேல? தோனி நடுவர்கள கவர்றாரு. இந்த சமயத்துல உடனே அம்பயர்கள் நிலமையைக் கட்டுப்படுத்த வேணாமா? கடுப்பாக ட்வீட் போட்ட ஆஸி. வீரர்

- Advertisement 1-

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு குஜராத், சென்னை, லக்னோ மும்பை ஆகிய அணிகள் முன்னேறிய வேளையில் ப்ளே ஆப் சுற்றின் முதல் போட்டியாக முதலாவது குவாலிபயர் போட்டியானது நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த போட்டியில் முதலாவதாக விளையாடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை குவித்தது.

பின்னர் 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணியானது 157 ரன்கள் மட்டுமே சேர்த்ததால் 15 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது தோனி மைதான நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

அந்த வகையில் இந்த போட்டியின் 16-வது ஓவரை வீச பதிரானாவை தோனி அழைத்த போது நடுவர்கள் அவரை பந்துவீச விடாமல் தடுத்தனர். ஏனெனில் பதிரானா 9 நிமிடங்களுக்கு மேல் மைதானத்தில் இருந்து வெளியேறி ஓய்வு எடுத்திருக்கிறார். ஆனால் விதிகளின்படி வீரர்கள் எட்டு நிமிடங்கள் மட்டுமே வெளியில் அமர அனுமதிக்கப்படுவார்கள். அப்படி ஓய்வெடுத்த பிறகு மீண்டு வரும்பொழுது அவர்கள் வெளியில் அமர்ந்த நேரம் எவ்வளவோ அவ்வளவு நேரம் பீல்டிங் செய்த பிறகு பந்துவீச அனுமதிக்கப்படுவார்கள்.

- Advertisement 2-

ஆனால் பதிரானா முன்கூட்டியே பந்துவீச வந்ததால் அவரை அம்பயர்கள் தடுத்தனர். ஆனால் தோனி அம்பயருடன் முறையிட்டு நேரம் கடத்த, இப்போது போதிய நேரம் ஆயிற்று என மீண்டும் பதிரானாவை பந்துவீச அனுமதித்தனர். இந்நிலையில் அம்பயருடன் தோனி வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்த விவகாரம் விவாதத்தை ஏற்படுத்தியது. அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான பிராட் ஹாக் இந்த விவகாரம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தினை பதிவிட்டுள்ளார். அதன்படி அவர் பதிவிட்டுள்ள அந்த கருத்தில்:

இதையும் படிக்கலாமே: வீடியோ: ஸ்கூல் பசங்களே ஒழுங்கா ஓடுவாங்க. நல்லா ஆடிட்டு இருத்தவர ஆட்டமிழக்க வச்ச தீபக் ஹூடா – மைதானத்தில் நடந்த குளறுபடி

தோனி தனது இருப்பை முழுமையாகப் பயன்படுத்தி, 4 நிமிட விவாதத்தில் நடுவர்களைக் கவர்ந்தார், இதனால் நீண்ட இடைவேளைக்குப் பிறகு களத்திற்கு வந்த பத்திரனாவுக்கு போதுமான அவகாசம் கிடைத்தது. இதனால் அவர் பந்து வீச அனுமதிக்கப்பட்டார். நடுவர்கள் இது போன்ற சமயங்களில் நிலைமையைக் கட்டுப்படுத்துவதை விடுத்து சம்பவத்தைப் பார்த்து சிரிப்பது சரியல்ல என தனது கருத்தினை பதிவிட்டுள்ளார். அதேபோன்று முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கர் : பிரஷர் அதிகமாக இருக்கும் இதுபோன்ற போட்டிகளில் நடுவர்களின் முடிவு தவறாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்