- Advertisement 3-
Homeவிளையாட்டு15 வருசத்துல ரோஹித்தை அப்படி பாத்ததே இல்ல.. சச்சின், தோனி ஃபீலிங்ஸ் இப்ப புரியுது.. எமோஷனலான...

15 வருசத்துல ரோஹித்தை அப்படி பாத்ததே இல்ல.. சச்சின், தோனி ஃபீலிங்ஸ் இப்ப புரியுது.. எமோஷனலான கோலி..

- Advertisement 1-

இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்கள் மத்தியில் நவம்பர் 19 உள்ளிட்ட ஒரு சில தினங்கள் ஆறாத வடு போல தோன்றி இருந்தாலும் டி20 உலக கோப்பை சாம்பியன் ஆனது ஒரு சிறந்த மருந்தாக மாறி உள்ளது. கடந்த ஜூன் மாதம் 29 ஆம் தேதியன்று நடைபெற்ற டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் தென்னாபிரிக்க அணியை வீழ்த்தி இருந்த இந்திய அணி, 13 ஆண்டுகள் கழித்து உலக கோப்பையை வென்று வரலாறு படைத்திருந்தது.

கோலி, ரோஹித் ஷர்மா, ரவீந்திர ஜடேஜா உள்ளிட்டோருக்கு கடைசி டி20 சர்வதேச போட்டியாகவும் இது இருக்க, அவர்கள் கோப்பையுடன் விடை பெற்றிருந்ததும் பலரை ஆனந்த கண்ணீரில் ஆழ்த்தி இருந்தது. கோலி மற்றும் ரோஹித் ஷர்மா உள்ளிட்டோர் தனியாக உலக கோப்பையுடன் போஸ் கொடுத்தது உள்ளிட்ட பல நெகிழ்ச்சியான தருணங்களும் இந்த வெற்றிக்கு பின்னர் அமைந்திருந்தது.

இதனிடையே, 2007 ஆம் ஆண்டு இந்திய அணி டி20 உலக கோப்பையை கைப்பற்றி சொந்த ஊர் திரும்பி இருந்த போது அவர்களுக்கு மும்பையில் வைத்து பெரும் பிரம்மாண்ட பேரணியும் ரசிகர்கள் முன்னிலையில் நடந்திருந்தது. சாலையே தெரியாத அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் இந்திய வீரர்கள் வந்த வாகனத்தை சூழ்ந்து கொள்ள, இந்திய கிரிக்கெட் பயணத்தில் மிக முக்கியமான ஒரு மைல்கல்லாகவும் இது மாறி உள்ளது.

மேலும், மும்பை வான்கடே மைதானத்திலும் இந்திய வீரர்கள் தடம் பதிக்க, அங்கே இருந்த ரசிகர்களும் இதனை பெரிதாக கொண்டாடி தீர்த்திருந்தனர். இதனிடையே, வான்கடே மைதானத்தில் வைத்து ரோஹித் ஷர்மாவை பற்றி கோலி தெரிவித்த கருத்து, பலரையும் எமோஷனல் ஆக்கி உள்ளது.

- Advertisement 2-

“21 வருடங்கள் இந்திய கிரிக்கெட்டை தோளில் சுமப்பது மட்டுமே வான்கடே மைதானத்தில் சரியானதாக இருக்கும். அதே நேரத்தில் நானும், ரோஹித்தும் அணியை கொஞ்ச காலம் தோளில் சுமந்தும் என நினைக்கிறேன். எனவே அந்த மைதானத்தில் இந்த உலக கோப்பையை கொண்டு வருவதை விட சிறந்த தருணம் இருக்காது.

உலக கோப்பையின் இறுதி போட்டி பாதியில் இளைய தலைமுறைக்காக இந்த ஃபார்மட்டில் இருந்து விடைபெறுவது சிறப்பாக இருக்கும் என நினைத்து அந்த முடிவை எடுத்தேன். 2011 ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்ற போது சீனியர் வீரர்கள் அழுத காரணத்தை என்னால் தொடர்புபடுத்தி பார்க்க முடியவில்லை. ஆனால், இப்போது அதனை என்னால் உணர முடிந்தது.

கடந்த 15 வருடத்தில் ரோஹித் இந்த அளவுக்கு உணர்ச்சிபூர்வமாக நான் பார்த்ததே கிடையாது. கோப்பையை வென்ற பின்னர், படியேறி வந்த போது நானும் அழுது கொண்டிருந்தேன். ரோஹித்தும் அழுது கொண்டே வந்தார்” என கோலி கூறி உள்ளார்.

சற்று முன்