- Advertisement -
Homeகிரிக்கெட்என் விஸ்வாசம் ஆர்சிபி மேல.. ஐபிஎல் வரலாற்றில் முதல் ஆளாக கோலி எட்டிப்பிடித்த இடம்..

என் விஸ்வாசம் ஆர்சிபி மேல.. ஐபிஎல் வரலாற்றில் முதல் ஆளாக கோலி எட்டிப்பிடித்த இடம்..

-Advertisement-

நடப்பு ஐபிஎல் தொடரில், ஒரு சில அணிகளை தவிர மற்ற அனைத்து அணிகளும் தங்களின் பிளே ஆப் சுற்று வாய்ப்பை பலப்படுத்தி கொண்டே இருக்கிறது. ஆனால், அதே வேளையில் பாப் டு பிளெஸ்ஸிஸ் தலைமையிலான ஆர்சிபி அணி மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு முறையும் கோப்பையை கைப்பற்றும் அணிகளில் ஒன்றாக கருதப்படும் ஆர்சிபி, இந்த முறையும் ரசிகர்களை ஏமாற்றி உள்ளதாகவே தெரிகிறது.

மொத்தம் ஆடியுள்ள 8 போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ள நிலையில் மற்ற ஏழு போட்டிகளிலும் தோல்வி அடைந்து மோசமான நிலையில் உள்ளது. மீதமுள்ள ஆறு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் தான் அவர்களால் பிளே ஆப் சுற்றை நினைத்தாவது பார்க்க முடியும்.

அப்படி அவர்கள் அனைத்து போட்டிகளிலும் வென்றால் கூட, மற்ற போட்டிகள் மற்றும் மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகள் ஆர்சிபிக்கும் சாதகமாக இருக்க வேண்டும் என்பது தான் மிக முக்கியம். இந்த நிலையில் தான் தற்போது ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஆடி வருகின்றனர். இந்த தொடரில் அபாயகரமான அணியாக இருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங்கை தேர்வு செய்திருந்தது.

அதன்படி ஆடிய ஆர்சிபி அணி 130 ரன்களை கடந்ததுடன் கோலியும் அரைச் சதமடித்துள்ளார். மேலும் இளம் வீரர் ராஜத் படிதார் 20 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அவுட்டாகி இருந்தார். நடப்பு ஐபிஎல் சீசனில் ஏற்கனவே அதிக ரன் அடித்தவராக இருக்கும் கோலி, இந்த அரை சதத்தின் மூலம் 400 ரன்களையும் இந்த சீசனில் கடந்த முதல் வீரராக மாறி உள்ளார்.

-Advertisement-

அப்படி ஒரு சூழலில் தான் ஐபிஎல் தொடர் வரலாற்றில் எந்த பேட்ஸ்மேனாலும் செய்ய முடியாத ஒரு முக்கியமான சாதனையை தன்வசம் ஆக்கி உள்ளார் விராட் கோலி. அதாவது மொத்தம் பத்து ஐபிஎல் சீசன்களில் 400 ரன்களுக்கு மேல் கோலி அடித்ததுடன் அப்படி செய்த முதல் பேட்ஸ்மேன் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.

முதல் சீசன் தொடங்கி இது வரை ஆர்சிபி அணிக்காக மட்டும் ஐபிஎல் தொடரில் ஆடி வரும் கோலி, அந்த அணியின் 250 வது ஐபிஎல் போட்டியில் மிக முக்கியமான சாதனையை எட்டி பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்