- Advertisement -
Homeகிரிக்கெட்ஐபிஎல் வச்சி மட்டும் முடிவு பண்ண வேண்டாம். இந்த வீரர் அதற்க்கு தகுதியானவர் கிடையாது -...

ஐபிஎல் வச்சி மட்டும் முடிவு பண்ண வேண்டாம். இந்த வீரர் அதற்க்கு தகுதியானவர் கிடையாது – ஆகாஷ் சோப்ரா அதிரடி

-Advertisement-

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டிக்கான இந்தியாவின் டெஸ்ட் அணிக்கு ரஹானே பெரிய இடைவெளிக்குப் பிறகு அழைக்கப்பட்டார். அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் அவரது அற்புதமான செயல்பாடுகள் மற்றும் ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக இந்த அழைப்பு தவிர்க்க முடியாததானது. WTC இறுதிப் போட்டியில் தனது தேர்வை நியாயப்படுத்தும் விதமாக அதிக ரன்களை இந்தியாவுக்காக சேர்த்தார்.

இப்போது  மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கான டெஸ்ட் அணியில் துணைக் கேப்டன் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அஜிங்க்யே ரஹானே பற்றி வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா பேசியுள்ளார். அதில் டெஸ்ட் போட்டிகளைப் போலவே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ரஹானேவுக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்குமா என்று கேட்கப்பட்டது.

அந்த கேள்விக்கு அளித்த பதிலில் “நல்ல கேள்வி. ஆனால் அது நடக்காது, நடக்கக்கூடாது. சமீபத்தில் கங்குலி, அவரை ஏன் துணைக் கேப்டனாக ஆக்கினார்கள் என்று சந்தேகத்தை எழுப்பியதை அறிந்தோம். 18 மாதங்கள் வெளியேறி, மீண்டும் அணிக்குள் ரஹானே வந்தார். நன்றாக விளையாடினார். திடீரென்று இந்திய டெஸ்ட் அணியின் துணைக் கேப்டன் ஆனார்.

ரஹானேவுக்கு எதிராக எதுவும் இல்லை.  டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை அந்த பஸ் ஏற்கனவே கிளம்பிவிட்டது என்று நினைக்கிறேன். ஐபிஎல்லில் அஜிங்க்யா ரஹானே ரன்கள் எடுத்தார் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் ஐபிஎல்லில் அஜிங்க்யா ரஹானே எங்கே ரன்கள் எடுத்தார்? அவர் ஒரு கட்டத்தில் அதிவேக அரைசதம் அடித்தார். பின்னர் அவர் ஈடன் கார்டனில் அற்புதமாக பேட்டிங் செய்தார். ஆனால் அதெல்லாமே சில மைதானங்களில் மற்றும் பவர்ப்ளேயில் எடுக்கப்பட்ட ஸ்கோர்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

-Advertisement-

அதன் பிறகு, குறிப்பாக சென்னை போன்ற மெதுவான ஆடுகளத்தில், ஃபார்ம் குறைந்து கொண்டே வந்தது. எப்படியிருந்தாலும், நீங்கள் முன்னோக்கி நகர வேண்டும். இந்தியன் டி20 அணியில் ஏற்கனவே பேட்ஸ்மேன்களுக்கு இடமில்லை. எனவே அஜிங்க்யா ரஹானே டி20 போட்டிகளுக்கு சரியான வீரர் இல்லை என்பது என் கருத்து – மன்னிக்கவும் ரஹானே” எனக் கூறியுள்ளார்.

ரஹானே இதுவரை 110 லிமிடெட் ஓவர் சர்வதேச போட்டிகளில் விளையாடி 3337 ரன்கள் குவித்துள்ளார். அவர் கடைசியாக பிப்ரவரி 2018 இல் சர்வதேச ஒயிட்-பால் விளையாட்டை விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்