- Advertisement -
Homeகிரிக்கெட்ஆரம்பத்துல தான் பாப்பன்.. அதுக்கப்புறம் என்னுடை வேலைய நான் காட்டினேன் - வெற்றிக்கு பிறகு பகார்...

ஆரம்பத்துல தான் பாப்பன்.. அதுக்கப்புறம் என்னுடை வேலைய நான் காட்டினேன் – வெற்றிக்கு பிறகு பகார் ஜமான் பேச்சு

-Advertisement-

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடரின் லீக் போட்டிகள் கிட்டத்தட்ட நிறைவடையும் தருவாயில் உள்ளன. ஒவ்வொரு அணியும் லீக் சுற்றின் கடைசி போட்டியை விளையாட ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில், நடப்பு உலகக் கோப்பை தொடரின் 31-வது லீக் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின.

எந்தவிதமான பரபரப்பும் இன்றி நடந்து முடிந்த போட்டியில் பாகிஸ்தான் அணி எளிதாக வெற்றி பெற்றது. 50 ஓவர்களில் 205 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷஃபிக் மற்றும் ஃபகர் ஜமான் ஜோடி சிறப்பான துவக்கம் கொடுத்தது. இருவரும் அரைசதம் அடித்த நிலையில், அப்துல்லா 68 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஃபகர் ஜமான் 74 பந்துகளில் 81 ரன்களை எடுத்து போட்டியின் கடைசி தருவாயில் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். துவக்கம் முதலே அதிரடியாக விளையாடி வந்த ஃபகர் ஜமான் மூன்று பவுண்டரிகள் மற்றும் ஏழு சிக்சர்களை பறக்கவிட்டார். இவரது அதிரடி காரணமாக பாகிஸ்தான் அணி 32.3 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை அடைந்து அபார வெற்றி பெற்றது.

இதன் காரணமாக நேற்றைய போட்டியின் ஆட்டநாயகனாக ஃபகர் ஜமான் தேர்வு செய்யப்பட்டார். இது குறித்து பேசிய ஃபகர் ஜமான், “ஆசிய கோப்பைக்கு பிறகு, எனது பேட்டிங்கில் அதிக பயிற்சி மேற்கொண்டேன். பயிற்சியின் போதே நான் சிறப்பாக உணர்ந்தேன், இதனால் அணியில் இடம்கிடைக்கும் என்று நினைத்தேன். இன்று, எனது கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும் வகையில், எனக்கு வாய்யு அளிக்கப்பட்டது.”

-Advertisement-

“நான் அப்துல்லாவிடம் ஆரம்பத்தில் சில ஓவர்களை பார்த்து ஆடுவதாக கூறினேன். என்னால் பெரிய சிக்சர்களை அடிக்க முடியும் என்று எனக்கு தெரியும். என்னுடன் ஆடும் சக வீரருக்கு பணியை எலிமையாக்குவதே எனது இலக்காக இருந்தது. இதனால், முதற்கட்ட ஓவர்களை கவனமாக எதிர்கொண்டு, அதன் பிறகு எனது ஷாட்களை நான் விளையாடினேன்.”

“100 ரன்களை அடைந்ததும், நெட் ரன் ரேட் எங்களது மனதில் இருந்தது. மேலும் 30 ஓவர்களில் போட்டியை முடிக்க இலக்க நிர்ணயித்துக் கொண்டோம். நான் நிறைய தோல்விகளை பார்த்துவிட்டேன். இதுபோன்ற ஆட்டத்தை தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இதே போன்று அடுத்த சில போட்டிகளிலும் அதிக ரன்களை குவிக்க முடியும் என்று நம்புகிறேன்,” என்று தெரிவித்தார்.

இந்த தொடரில் இதுவரை ஏழு போட்டிகளில் விளையாடி இருக்கும் பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் பாகிஸ்தான் அணி ஐந்தாவது இடத்தில் உள்ளது. நேற்றைய போட்டியில் தோல்வியுற்ற வங்காளதேசம் அணி தொடரில் இருந்து வெளியேறியது.

-Advertisement-

சற்று முன்