- Advertisement -
Homeசினிமாநடிகராக அறிமுகமாகும் லோகேஷ் கனகராஜ்… காக்கா பிடிக்க களமிறங்கும் சன் பிக்சர்ஸ்… எவ்வளவு கோடி சம்பளம்...

நடிகராக அறிமுகமாகும் லோகேஷ் கனகராஜ்… காக்கா பிடிக்க களமிறங்கும் சன் பிக்சர்ஸ்… எவ்வளவு கோடி சம்பளம் தெரியுமா?

-Advertisement-

லோகேஷ் கனகராஜ் தற்போது இந்திய சினிமாவே திரும்பி பார்க்கும் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய “விக்ரம்” திரைப்படம் உலகளவில் ரூ.400 கோடிகளுக்கும் மேல் வசூல் ஆகி சாதனை படைத்தது. யாரும் எதிர்பார்க்காத இந்த மாஸ் ஹிட்டால் தமிழ் திரையுலகமே ஆச்சரியத்திற்குள்ளானது.

மேலும் கமல்ஹாசன் கேரியரிலேயே மிகவும் முக்கியமான வெற்றித் திரைப்படமாக “விக்ரம்” படம் அமைந்தது. இத்திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ்ஜிற்கு ஒரு விலை உயர்ந்த காரை பரிசாக அளித்தார். மேலும் உதவி இயக்குனர்களுக்கு புது பைக்குகளையும் வழங்கினார். அதே போல் “விக்ரம்” திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாப்பாத்திரத்தில் நடித்த சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச்சை பரிசாக அளித்தார்.

“விக்ரம்” திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து “லியோ” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜூன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மேத்யூ போன்ற பலரும் நடித்து வருகின்றனர். இத்திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. லோகேஷ் கனகராஜ் இதற்கு முன்பு இயக்கிய “விக்ரம்” திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து “லியோ” திரைப்படத்திற்காக விஜய் ரசிகர்கள் வெறிகொண்டு காத்திருக்கின்றனர்.

இந்த வேளையில் ஸ்டன்ட் மாஸ்டர்களான இரட்டையர்கள் அன்பறிவு ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளாராம். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனராம். இதில் லோகேஷ் கனகராஜ், அனிருத் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகர்களாக அறிமுகமாகிறார்களாம்.

-Advertisement-

லோகேஷ் கனகராஜ் “லியோ” திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்தை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஆதலால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் லோகேஷ்-ரஜினிகாந்த் புராஜெக்ட்டை கைப்பற்றிவிடவேண்டும் என முடிவு செய்துள்ளதாம்.

இதனால் அன்பறிவ் இயக்கும் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகும் லோகேஷ் கனகராஜ்ஜிற்கு 10 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்படவுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். இவ்வாறு லோகேஷுக்கு ஐஸ் வைத்து ரஜினிகாந்த் புராஜெக்ட்டை கைப்பற்ற களமிறங்கியுள்ளதாம் சன் பிக்சர்ஸ்.

-Advertisement-

சற்று முன்