- Advertisement -
Homeசினிமாஅஜித் படத்தில் விஜய் சேதுபதியா? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!

அஜித் படத்தில் விஜய் சேதுபதியா? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!

-Advertisement-

விஜய் சேதுபதி தற்போது இந்திய சினிமாவின் பிசியான நடிகராக வலம் வருகிறார். தொடக்கத்தில் பல திரைப்படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி, “தென்மேற்கு பருவகாற்று”, “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்”, “பீட்சா” போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து ஜனரஞ்சக ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றார். அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த விஜய் சேதுபதி, தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவின் முக்கிய நடிகராகவும் தற்போது வளர்ந்து நிற்கிறார்.

“விக்ரம் வேதா”, “மாஸ்டர்”, “விக்ரம்” ஆகிய திரைப்படங்களில் வில்லனாக கலக்கிய விஜய் சேதுபதி பல திரைப்படங்களில் கேமியோ ரோலிலும் வலம் வந்தார். ஒரு ஆண்டுக்குள் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்தார் விஜய் சேதுபதி. ஆதலால் திரையரங்குகளில் எங்கு திரும்பினாலும் அவரது போஸ்டர்களாகவே இருந்தன.

தற்போது விஜய் சேதுபதியை ஹீரோ என்பதை விட வில்லனாகவே அதிக ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். ஆதலால் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் திரைப்படங்களுக்கு சமீப காலமாக வரவேற்பு குறைந்துள்ளது. எனினும் விஜய் சேதுபதி இனி தொடர்ந்து ஹீரோவாக நடித்து மீண்டும் தனது கதாநாயக அந்தஸ்தை தக்கவைத்துக்கொள்வார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

விஜய் சேதுபதி நடிக்க வந்த புதிதில், “லவ் பேர்ட்ஸ்”, “கோகுலத்தில் சீதை”, “புதுப்பேட்டை”, “லீ”, “வெண்ணிலா கபடிக்குழு” ஆகிய பல திரைப்படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். இதில் அஜித்குமார் நடித்த “ஆழ்வார்” திரைப்படமும் அடங்கும். இந்த நிலையில் ஆழ்வார் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியில் விஜய் சேதுபதியின் புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது. அந்த காட்சி தற்போது இணையத்தில் தீயாக வலம் வருகிறது. அந்த காட்சி இதோ.

-Advertisement-

விஜய் சேதுபதி தற்போது ஹிந்தியில், “மெர்ரி கிருஸ்துமஸ்”, “மும்பைக்கார்”, ‘ஜவான்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் “காந்தி டாக்ஸ்” என்ற மௌன திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்