- Advertisement 3-
Homeவிளையாட்டுகோலி பத்தி அப்படி பேசுனது தப்பு தான்.. சொன்ன வார்த்தைக்கு பரிகாரம் தேடிய ஆகாஷ் சோப்ரா..

கோலி பத்தி அப்படி பேசுனது தப்பு தான்.. சொன்ன வார்த்தைக்கு பரிகாரம் தேடிய ஆகாஷ் சோப்ரா..

- Advertisement 1-

இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங்கில் முதுகெலும்பாக இருந்து வருபவர் விராட் கோலி. 2022 ஆம் ஆண்டுக்கு முன்பாக கேப்டன், பேட்ஸ்மேன் என இரண்டிலும் கவனம் செலுத்த தவறி சற்று தடுமாற்றத்தை கண்டிருந்தார் கோலி. இதனால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதை பொருட்டில் கொண்டு குறைந்த ஓவர் போட்டிகளில் அவர் வழிவிட வேண்டும் என்ற அளவுக்கு விமர்சனம் எழுந்தது.

அப்படி இருக்கையில், அதே ஆண்டில் நடந்த ஆசிய கோப்பை, டி 20 உலக கோப்பை என அடுத்தடுத்து பல முக்கியமான இன்னிங்ஸ்களை கொடுத்து இளம் வீரர்களுக்கே சவால் விடும் வகையில் தனது ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தினார். இதன் பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மிக முக்கியமான வீரராக மாறி மீண்டும் பழைய ஃபார்முக்கே கோலி திரும்பியது, ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி இருந்தது.

கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஒரு நாள் உலக தொடரிலும் கூட அதிக ரன் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்தார் கோலி. சமீபத்தில் நடந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி 20 தொடரில், கோலி பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை என்றாலும் அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆரம்பமாக உள்ள டெஸ்ட் தொடரில் நிச்சயம் பல சிறந்த இன்னிங்ஸ்களை ஆடுவார் என்ற நம்பிக்கையிலும் ரசிகர்கள் உள்ளனர்.

இதனிடையே, இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா கோலி பேட்டிங் குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணியின் ஜோ ரூட், ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் மற்றும் இந்திய அணி வீரர் கோலி ஆகியோரை கிரிக்கெட் அரங்கில் “Fab 4” என குறிப்பிடுவார்கள். இதில் கோலி ஃபார்ம் அவுட்டில் இருந்த போது அவர் அந்த நான்கு பேரில் ஒருவர் இல்லை என குறிப்பிட்டிருந்தார் ஆகாஷ் சோப்ரா.

- Advertisement 2-

தனது கருத்தை தற்போது சரி செய்த அவர், “Fab 4-ல் விராட் இல்லை என நான் தான் சொல்லி இருந்தேன். ஆனால் இப்போது அந்த வார்த்தையை சரி செய்து கொள்கிறேன். அந்த இரண்டு ஆண்டுகள் அவர் சிறப்பாக ஆடாததால் நான் அப்படி கூறினேன். இப்போது மீண்டும் ஃபார்முக்கு திரும்பி விட்டார் கோலி. இந்த லிஸ்டில் மீண்டும் கோலி கம்பேக் கொடுத்த விதம் மிக அழகானதாக உள்ளது.

அனைத்தும் முடிந்து விட்டது என நினைத்த போது உலக கோப்பையில் ஆடி அதில் தொடர் நாயகன் விருதினையும் நீங்கள் வென்றீர்கள். கோலி அவரது ஆட்டத்தை மீண்டும் ஒரு முறை புதுப்பித்து மீண்டு வந்துள்ளார்” என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

சற்று முன்