- Advertisement 3-
Homeவிளையாட்டுENG vs NZ : 4,658 போட்டிகள்.. எந்த அணியும் செய்யாத உலக சாதனை.. தோற்றாலும்...

ENG vs NZ : 4,658 போட்டிகள்.. எந்த அணியும் செய்யாத உலக சாதனை.. தோற்றாலும் சிறப்பான சாதனையோடு தோற்ற இங்கிலாந்து

- Advertisement 1-

உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை எதிர்த்து நியூசிலாந்து அணி களமிறங்கியது. காயம் காரணமாக நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் களமிறங்க மாட்டார் என்று அந்நாட்டு கிரிக்கெட் சங்கம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் லேதம் பவுலிங்கை தேர்வு செய்தார்.

இதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பேர்ஸ்டோவ் – மலான் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. நிதானமான ஆடிய மலான் 14 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து பேர்ஸ்டோவ் 33 ரன்காளில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த ரூட் பொறுப்புடன் விளையாட, மற்ற வீரர்கள் அதிரடியாக முயற்சித்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இதனால் ப்ரூக் 25 ரன்களுலும், மொயின் அலி 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன்பின் வந்த கேப்டன் பட்லர் பொறுப்பை உணர்ந்து ரூட்டிற்கு உதவியாக ஆடினார். சிறப்பாக ஆடிய பட்லர் 42 ரன்களில் வெளியேற, தொடர்ந்து வந்த லிவிங்ஸ்டன் 20 ரன்களிலும், சிறப்பாக ஆடிய ஜோ ரூட் 77 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினார்.

பின்னர் வந்த சாம் கரண் 14 ரன்களிலும், வோக்ஸ் 11 ரன்களிஉலும், அடில் ரஷீத் 15 ரன்களிலும், மார்க் வுட் 13 ரன்களும் எடுத்தனர். இதன் காரணமாக இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 282 ரன்கள் சேர்த்தது. இந்திய மண்ணில் வெற்றிபெற இது போதுமான இலக்கு என்றாலும், இங்கிலாந்து அணி வித்தியாசமான புதிய சாதனையை படைத்துள்ளது.

- Advertisement 2-

இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் அனைத்து பேட்ஸ்மேன்களும் இரட்டை இலக்க ஸ்கோரை எடுத்தனர். இதன் மூலம் 4,658 போட்டிகளில் எந்த அணியும் செய்யாத சாதனையை இங்கிலாந்து அணி படைத்துள்ளது. இதன் பின் களமிறங்கிய நியூசிலாந்து அணி 36.2 ஓவர்களில் 283 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

மேலும் 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அடைந்த தோல்விக்கு, நியூசிலாந்து அணி மரண மாஸ் பதிலடியை கொடுத்துள்ளது. நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி உலகக்கோப்பை முதல் போட்டியில் தோல்வியடைந்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சற்று முன்