- Advertisement -
Homeகிரிக்கெட்2 வருசமா எனக்கு எதிரா பிளான் நடக்குது.. ஆட்ட நாயகன் ஜெயிச்சதும் ரசல் சொன்ன பரபர...

2 வருசமா எனக்கு எதிரா பிளான் நடக்குது.. ஆட்ட நாயகன் ஜெயிச்சதும் ரசல் சொன்ன பரபர கருத்து..

-Advertisement-

ஐபிஎல் போட்டிகள் என வந்து விட்டாலே எப்பொழுதும் அதிரடி ஆட்டத்திற்கு பஞ்சம் இருக்காது. பந்து வீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்தாலும் அதனையும் தாண்டி பல அதிரடி வீரர்கள் பந்துகளை சிக்ஸர்கள் மற்றும் ஃபோர்களுக்கு விரட்டுவதையே வேலையாக வைத்துள்ளனர். அந்த வகையில் கடந்த சில சீசன்களாக கொல்கத்தா அணியின் அதிரடி ஆட்டத்திற்கு தூணாக இருந்து வருபவர் தான் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆண்ட்ரே ரசல்.

இவர் களத்திற்கு வந்து விட்டாலே எப்படிப்பட்ட பந்து வீச்சாளராக இருந்தாலும் அவருக்கு டாட் பால் வீசக் கட சிரமப்படுவார்கள். அதே போல, எப்படிப்பட்ட பந்து தன்னை நோக்கி வந்தாலும் அதனை சிக்ஸர்களை நோக்கி அனுப்புவதையே ஒரு முழு நேர வேலையாக வைத்துள்ளார்.

அப்படி ஒரு சூழ்நிலையில் தான் இந்த 17 வது ஐபிஎஸ் சீசனின் முதல் போட்டியில் கொல்கத்தா அணி, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர் கொண்டிருந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியில் தொடக்க வீரர் சால்ட் தவிர அனைவரும் ரன் எடுக்காமல் அவுட்டான போது 160 ரன்களை தொடுவார்களா என்ற கேள்வி எழுந்திருந்தது.

ஆனால் மிடில் ஆர்டரில் களமிறங்கிய ரசல், வந்த வேகத்திலேயே பந்துகளை சிக்ஸர்களுக்கு அனுப்ப தொடங்கி விட்டார். 25 பந்துகளில் ஏழு சிக்ஸர்கள் மற்றும் மூன்று ஃபோர்களுடன் 64 ரன்கள் எடுத்திருந்தார். அதே போல பந்து வீச்சிலும் இரண்டு விக்கெட்டுகளை ரசல் கைப்பற்றி இருந்ததையடுத்து கொல்கத்தா அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்ததால் ஆட்ட நாயகன் விருதினையும் அவர் வென்றிருந்தார்.

-Advertisement-

2024 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனை அமர்க்களமாக தொடங்கியுள்ள ரசல், ஆட்டநாயகன் விருது வென்ற பின் பேசுகையில், “சில நேரங்களில் இன்ஸ்டாவை பார்த்து தான் நான் எப்படி பந்துகளை அடிக்கிறேன் என்பதை உணர்ந்து கொள்கிறேன். அதை பார்க்கும் போது நாம் சிறப்பாக ஆடுகிறோம் என்பதும் தெரிகிறது. இதனால், என்னை நோக்கி வரும் பந்துகளை நான் ரியாக்ட் செய்யவும் பார்க்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே எனக்கு எதிராக பல திட்டங்களை பந்து வீச்சாளர்களை வகுத்து வருகிறார்கள்.

முன்பெல்லாம் நான் வாய்ப்பில்லாமல் பெஞ்சில் அமர்த்தப்பட்டிருந்தேன். இதன் பின்னர் என்னை பயன்படுத்தவும் முயற்சி செய்தேன். கொல்கத்தா அணி எனக்காக நிறைய செய்துள்ளது. என்னுடைய இந்த ஆட்டமும் கொல்கத்தா அணிக்காக நான் எவ்வளவு நன்றிக்கடன்பட்டிருக்கிறேன் என்பதை உணர்த்துவதற்காக தான்.

இதே வழியில் நான் தொடர்ந்து செயல்படுவேன் என நினைக்கிறேன். ஹர்ஷித் ராணா தனக்கு கடைசி ஓவர் வேண்டுமென என்னிடம் கூறினார். அதனை வாங்கி கேட்டுக் கொண்டு முதல் பந்தில் சிக்ஸர் கொடுத்தும் பலமாக திரும்ப வந்து தன்னை நிரூபிக்கவும் செய்துள்ளார்” என ரசல் தெரிவித்தார்.

-Advertisement-

சற்று முன்