- Advertisement -
Homeகிரிக்கெட்அப்பவே முடிவு பண்ணிட்டோம் மேட்ச் ஜெயிக்கணும்னு.. இனி எங்க பாதை.. மாஸ் ஸ்பீச் கொடுத்த பாஃப்..

அப்பவே முடிவு பண்ணிட்டோம் மேட்ச் ஜெயிக்கணும்னு.. இனி எங்க பாதை.. மாஸ் ஸ்பீச் கொடுத்த பாஃப்..

-Advertisement-

ஏறக்குறைய பிளே ஆப் வாய்ப்பை இழக்கும் கட்டத்தில் ஆர்சிபி உள்ள நிலையில் தற்போது அவர்கள் ஃபார்முக்குள் வந்துள்ளது ஓரளவுக்கு அந்த அணியின் ரசிகர்களை நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது என்று சொல்லலாம். முதல் எட்டு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்ற பெங்களூர் அணி இந்த சீசனிலேயே அனைத்து அணிகளையும் பேட்டிங் மூலம் அச்சுறுத்தி வந்த ஹைதராபாத் அணியை வீழ்த்தி பட்டையை கிளப்பி இருந்தது.

தங்களின் பத்தாவது போட்டியில் குஜராத் அணியை எதிர் கொண்டிருந்த அவர்கள் 200 ரன்களை பதினாறாவது ஓவரிலேயே சேஸ் செய்து பட்டையை கிளப்பி உள்ளனர். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 200 ரன்களை எடுத்திருந்தது. மூன்றாவது வீரராக உள்ளே வந்த சாய் சுதர்சன் 84 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். அவரைப் போல மற்றொரு தமிழக வீரரான ஷாருக்கானும் 58 ரன்கள் எடுக்க அந்த அணி 200 ரன்களை எட்டி இருந்தது.

தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய பெங்களூர் அணி, 15 வது மற்றும் 16 வது ஓவர்களில் சேர்த்து 58 ரன்கள் எடுத்து 24 பந்துகள் மீதம் வைத்து இலக்கை எட்டிப் பிடித்திருந்தது. அதில் கடைசி இரண்டு ஓவரில் 50 ரன்கள் சேர்த்த வில் ஜேக்ஸ், 41 பந்துகளில் சதம் எடுத்து அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்திருந்தார். அதிலும் கடைசி பத்து பந்துகளில் அவர் 50 ரன்கள் சேர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனால் பெங்களூர் அணி வெற்றி பெற்ற நிலையில், குஜராத் அணிக்கு இந்த தோல்வி ஒரு பின்னடைவாகவும் அமைந்துள்ளது. இந்த வெற்றிக்கு பின் பேசியிருந்த ஆர்சிபி கேப்டன் பாப் டு பிளெஸ்ஸிஸ், “இது சிறந்த பிட்ச் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் பந்து வீசிய போது இந்த ஸ்கோரை நிச்சயம் எட்டி விடலாம் என்று நினைத்தோம். தற்போது நாங்கள் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டு துறைகளிலும் சிறப்பாக முன்னேறி வருவதாக கருதுகிறேன்.

-Advertisement-

தொடக்கத்தில் மோசமாக ஆடி இருந்தாலும் தற்போது அணி வீரர்கள் மத்தியில் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் இருந்து பந்து வீச்சாளர்கள் இப்போது வரை சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். மேலும் அணிக்கு தேவையான அடிப்படையான விஷயங்களையும் நாங்கள் சிறப்பாக செய்கிறோம்” என பாப் கூறியுள்ளார்.

-Advertisement-

சற்று முன்