- Advertisement -
Homeகிரிக்கெட்2 ஓவரில் 58 ரன்கள்.. ஆர்சிபி வீரரின் ருத்ரதாண்டவம்.. இந்த நேரத்துலயா ஃபார்முக்கு வர்றது..

2 ஓவரில் 58 ரன்கள்.. ஆர்சிபி வீரரின் ருத்ரதாண்டவம்.. இந்த நேரத்துலயா ஃபார்முக்கு வர்றது..

-Advertisement-

புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தில் இருந்த குஜராத் டைட்டன்ஸ் அணியும் கடைசி இடத்தில் இருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் சமீபத்தில் நடந்து முடிந்த போட்டியில் மோதி இருந்தது. முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணி 9 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்றிருந்தது. அதே போல ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒன்பது ஆட்டங்களில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று பரிதாபமான நிலையில் இருந்தது.

பெங்களூர் அணி மீதமுள்ள 5 போட்டிகளில் வென்றாலும் கூட பிளே ஆப் முன்னேறுவது சற்று கடினமான விஷயம் தான். அப்படி ஒரு சூழலில் தான் அவர்கள் குஜராத் அணியை எதிர் கொண்டிருந்தனர். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி. 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்திருந்தது.

ஏழு ஓவர்களில் 50 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த குஜராத் அணியில் பின்னர் இணைந்த தமிழக வீரர்கள் சாய் சுதர்சன் மற்றும் ஷாருக்கான் இணைந்து அதிரடி பார்ட்னர்ஷிப்பை அமைத்திருந்தனர். இதில் கடைசி வரை அவுட்டாகாமல் களத்தில் நின்ற சாய் சுதர்சன், 49 பந்துகளில் நான்கு சிக்ஸர்களுடன் 84 ரன்கள் எடுத்திருந்தார். அவருடன் இணைந்து அடிய ஷாருக்கானும் 30 பந்துகளில் 5 சிக்ஸர்களுடன் தனது முதல் ஐபிஎல் அரைச் சதத்தை பதிவு செய்ததுடன் 58 ரன்கள் எடுத்து அவுட் ஆகி இருந்தார்.

இவர்களின் அதிரடி ஆட்டத்தால் குஜராத் அணியும் 20 ஓவர்களில் 200 ரன்களை தொட்டிருந்தது. தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய பெங்களூர் அணியில் கேப்டன் டூப்ளசிஸ் 24 ரன்களில் அவுட்டாக மற்றொரு தொடக்க வீரரான விராட் கோலி இந்த சீசனில் தனது ஐந்தாவது அரை சதத்தையும் கடந்திருந்தார். அவருடன் இணைந்து ஆடிய வில் ஜேக்ஸ் அதிரடியாக ஆடி ரன் சேர்க்க பெங்களூர் அணி 14 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்திருந்தது.

-Advertisement-

விக்கெட்டுகள் கைவசம் இருந்ததால் 36 பந்துகளில் தேவையான 53 ரன்களை 4 முதல் 5 ஓவர்களில் எடுத்து விடுவார்கள் என்று தான் கருதினர். ஆனால், அடுத்த 2 ஓவர்களிலேயே 58 ரன்களை சேர்த்து 16 ஓவரில் போட்டியை முடித்து பெங்களூரு அணி. மோஹித் ஷர்மா மற்றும் ரஷீத் கான் வீசிய ஓவர்களில் தலா 29 ரன்கள் சேர்க்கப்பட, 29 பந்துகளில் 44 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த வில் ஜேக்ஸ், அடுத்த 12 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து தனது ஐபிஎல் சதத்தையும் பதிவு செய்து புதிய வரலாற்றை ஐபிஎல் தொடரில் பதித்துள்ளார்.

மேலும் தொடர் தோல்விகளால் துவண்டு போன ஆர்சிபி, ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து வெற்றிகளை பதிவு செய்துள்ளது.

-Advertisement-

சற்று முன்