- Advertisement 3-
Homeவிளையாட்டுகில்னா பாவம்.. புஜாரானா இளக்காரமா.. அணில் கும்ப்ளே சொன்ன வார்த்தை.. கொதித்த ரசிகர்கள்..

கில்னா பாவம்.. புஜாரானா இளக்காரமா.. அணில் கும்ப்ளே சொன்ன வார்த்தை.. கொதித்த ரசிகர்கள்..

- Advertisement 1-

ஒரே ஒரு போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தோல்வி அடைந்ததால் இன்னும் அடுத்த போட்டி ஆரம்பமாவது வரை நிறைய விமர்சனங்களை அவர்கள் கேட்டுக் கொண்டே தான் இருக்க வேண்டும். பொதுவாக இந்திய அணி தொடர்ந்து வெற்றி பெறும் போது பாராட்டுக்கள் குறைவாக கிடைத்தாலும், சில முக்கியமான ஒரே போட்டியில் தோற்றால் அப்படியே நேர்மாறாக அனைவருமே இந்திய வீரர்களை கடுமையாக விமர்சிப்பார்கள்.

இந்திய அணி வெற்றி பெறும் போது தெரியாத குறைகள் எல்லாம், அவர்கள் தோல்வி அடையும் போது பட்டியல் போட அனைவருமே தயாராக இருப்பார்கள். அந்த வகையில் தான் இங்கிலாந்து அணிக்கு எதிராக சமீபத்தில் அவர்கள் தோல்வி அடைந்த போட்டிக்கு பின்னர் நடந்துள்ளது. 190 ரன்கள் வரை டெஸ்டில் முன்னிலை பெற்றும் ஒரு அணி தோற்பது சாதாரணமான விஷயம் கிடையாது.

அப்படி ஒரு பலத்துடன் இந்திய அணி இருந்தும், இரண்டாவது இன்னிங்சில் மீண்டு வந்த இங்கிலாந்து அணி,, பேட்டிங், பௌலிங் என அனைத்திலுமே அச்சுறுத்துதலாக இருந்து வெற்றியை ருசித்திருந்தது. 230 ரன்கள் என்ற இலக்கு எட்டக் கூடியதாக இருந்த போதிலும், இந்திய அணியில் இடம்பெற்றிருந்த சில இளம் பேட்ஸ்மேன்கள் காரணமாக முடியாமல் போனது என்பது தான் பலரின் குற்றச்சாட்டாக உள்ளது.

சுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட வீரர்கள் தொடர்ந்து மோசமாக ஆடி வந்த போதிலும், அவர்களுக்கான வாய்ப்பு கிடைத்துக் கொண்டே இருக்கிறது. ஆனால், புஜாரா, ரஹானே என சீனியர் வீரர்கள் ஒரு சில போட்டிகளில் மோசமாக ஆடியதற்கு அவர்களுக்கான வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.

- Advertisement 2-

இது பற்றி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் அணில் கும்ப்ளே சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். “கில் இனி வரும் போட்டிகளில் ரன்கள் அடித்தே ஆகவேண்டும். சுழற்பந்து வீச்சை எப்படி எதிர்த்து ஆட வேண்டும் என்ற திட்டத்துடன் அவர் வர வேண்டும். பேட்டை இறுக்கமாக பிடித்து ஆடும் கில், அதனை மாற்றி விட்டு சூழலுக்கு ஏற்ற வகையில் தன்னை தயார் செய்ய அடுத்த போட்டிக்கு முன் திட்டங்களை வகுக்க வேண்டியது அவசியம்.

100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் ஆடிய புஜாராவுக்கு கூட கிடைக்காத வாய்ப்பு, கில்லுக்கு தொடர்ந்து கிடைத்து வருகிறது. தொடக்க வீரராக ஆடிய கில், அவராகவே விருப்பப்பட்டு 3 வது வீரராக களமிறங்கி ஆடி வருகிறார். உங்களிடம் அந்த திறமை இருக்கிறது. இளம் வீரரான சுப்மன் கில், மனதளவில் முக்கியமாக தயாராகி அடுத்த போட்டியில் நிச்சயம் ஆடியே ஆக வேண்டும். இல்லையென்றால் அவருக்கு தான் தேவை இல்லாத நெருக்கடி” என அணில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

சற்று முன்