- Advertisement 3-
Homeவிளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணிக்கு காத்திருக்கும் ஆப்பு.. கொஞ்சம் மிஸ் ஆனாலும் எல்லாரோட கதையும் முடிஞ்சுது..

இந்திய கிரிக்கெட் அணிக்கு காத்திருக்கும் ஆப்பு.. கொஞ்சம் மிஸ் ஆனாலும் எல்லாரோட கதையும் முடிஞ்சுது..

- Advertisement 1-

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி 20 தொடரை வெற்றிகரமாக முடித்திருந்த இந்திய அணி, தற்போது மிகவும் எதிர்பார்ப்பு நிறைந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆடி வருகிறது. பொதுவாக இந்திய மண்ணில் டெஸ்ட் தொடர் நடந்தாலே அது இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகம் தான். ஏனென்றால் இங்கே சுழற்பந்து வீச்சு அதிகம் சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணி வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் உருவாகும் என்பதால் தான்.

வெளிநாட்டைச் சேர்ந்த நட்சத்திர வீரர்கள் இந்திய மண்ணில் சூழலை எதிர்த்து ஆட முடியாமல் பெரிய அளவில் விக்கெட்டுகளையும் இழப்பார்கள். அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளும் இந்திய அணி, எளிதாக டெஸ்ட் போட்டியில் வெற்றியும் பெற்று விடும். அப்படி தான் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் ஆரம்பமும் இருந்தது.

ஆனால், இரண்டாவது இன்னிங்சில் அனைத்துமே தலைகீழாக மாறிப் போனது. முதல் இன்னிங்ஸை போல இந்த முறையும் விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி தடுமாறிய போதிலும் அந்த அணியை பாகுபலி போல மீட்டெடுத்தார் முன்னணி பேட்ஸ்மேன் ஒல்லி போப். யார் அவுட்டானால் என்ன, என் அணியின் ஸ்கோரை நான் பார்த்து கொள்கிறேன் என்பது போன்று ஒரு சிறப்பான ஆட்டத்தை ஆடி வருகிறார்.

இன்னிங்ஸ் வெற்றியை கூட இந்திய அணி பெற்று விடும் என்ற நம்பிக்கையில் இருந்த ரசிகர்கள் விருப்பத்தை சுக்கு நூறாக உடைத்துள்ளார். தற்போது 126 ரன்கள் வரை முன்னிலை பெற்றுள்ள இங்கிலாந்து அணி, இதே ஆட்டத்தை நாலாவது நாளிலும் தொடர்ந்தால் நிச்சயம் இந்திய அணிக்கு கடினமான ஒரு இலக்கை நிர்ணயித்து விடலாம்.

- Advertisement 2-

இந்திய அணியின் ஆபத்தான பந்து வீச்சை தனியாளாக கையாண்டு வரும் ஒல்லி போப், 148 ரன்களுடன் அவுட்டாகாமல் களத்தில் உள்ளார். அவர் அடுத்த நாளிலும் இன்னும் ரன் சேர்க்கும் பட்சத்தில் இலக்கை நோக்கி ஆடும் இந்திய அணிக்கு நிச்சயம் தலைவலியாக தான் இருக்கும் என தெரிகிறது. இதனால் முடிந்தவரை சீக்கிரம் இங்கிலாந்து அணியின் விக்கெட்டை கைப்பற்றி இந்திய அணி வெற்றி பெறும் முயற்சிகளில் இறங்க வேண்டும்.

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் அணில் கும்ப்ளே, இந்திய அணிக்கான வெற்றி வாய்ப்பு பற்றி சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். “ஒல்லி போப் அற்புதமாக பேட்டிங் செய்து வருகிறார். இந்திய பந்து வீச்சாளர்களை தனக்கு எதிரே செட்டில் ஆகவிடாமல் தான் நினைத்த திட்டத்தை அப்படியே செயல்படுத்தி வருகிறார்.

இந்திய அணி 4 வது இன்னிங்சில் இலக்கை நோக்கி ஆட போவதால், இங்கிலாந்து அணி 150 ரன்கள் முன்னிலை வகிப்பதற்குள் அவர்களை ஆல் அவுட்டாக்க வேண்டும்” என இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அணில் கும்ப்ளே கூறியது போல, இங்கிலாந்து அணி அதிக ரன் சேர்த்தால், 4 வது இன்னிங்சில் பேட்டிங் செய்ய போகும் இந்திய அணிக்கு தான் வினையாக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்