- Advertisement 3-
Homeவிளையாட்டுஒரே பந்துக்கு ரெண்டாவது தடவ டிஆர்எஸ் எடுத்தது ஏன்? போட்டிக்குப் பின்னர் அஸ்வின் கொடுத்த விளக்கம்!

ஒரே பந்துக்கு ரெண்டாவது தடவ டிஆர்எஸ் எடுத்தது ஏன்? போட்டிக்குப் பின்னர் அஸ்வின் கொடுத்த விளக்கம்!

- Advertisement 1-

ஐபிஎல் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகிய போட்டிகளுக்கு பிறகு இந்திய அணிக்கு இன்னும் 3 வாரங்களுக்கு எந்த போட்டித் தொடரும் இல்லை. இந்நிலையில்தான் இப்போது TNPL தொடர் தொடங்கி கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஐபிஎல் மற்றும் இந்திய அணிக்காக பல்வேறு சிறந்த வீரர்களை உருவாக்கிய பெருமை இந்த தொடருக்கு உண்டு என்றால் அது மிகையாகாது.

இந்த தொடரின் மூன்றாவது போட்டியாக நேற்று திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் திருச்சி அணிகள் மோதின. இந்த போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் சுவாரஸ்யமான ஒரு சம்பவம் நடந்தது. திண்டுக்கல் அணியின் கேப்டன் அஸ்வின் பந்துவீச்சில் திருச்சி வீரர் ராஜ்குமார் பேட் செய்த போது பந்தை அடிக்கும் போது கீப்பரிடம் செல்ல கேட்ச்க்கான அப்பீல் செய்யப்பட்டது. அதற்கு நடுவர் விக்கெட் கொடுக்க, உடனடியாக அதை ரிவ்யூ செய்தார் ராஜ்குமார்.

ரிவ்யூவில் பந்து பேட்டை நெருங்கி செல்லும் போது ஸ்பைக் ஸ்னிக்கோ மீட்டரில் தெரிந்தது. ஆனால் அதே நேரத்தில் பேட் தரையில் பட்டிருப்பதும் தெரியவந்தது. இதனால் ஸ்பைக் பந்து, பேட்டில் பட்டதால் வந்ததா இல்லை பேட் தரையில் பட்டதால் வந்ததா என புரியாத சூழல் உருவானது.

- Advertisement 2-

இதனால் சந்தேகத்தின் பலனை பேட்ஸ்மேனுக்கு அளித்து நாட் அவுட் என அறிவித்தார் மூன்றாம் நடுவர். ஆனால் நடுவரின் முடிவில் திருப்தி அடையாத அஸ்வின் மீண்டும் டி ஆர் எஸ் கேட்டார். அதனால் திரும்பவும் அதை நீண்ட நேரம் ஆராய்ந்த நடுவர் மறுபடியும் நாட் அவுட் என்றே அறிவித்தார்.

இந்நிலையில் போட்டி முடிந்ததும் பேசிய அஸ்வினிடம் ஏன் இரண்டாம் முறையாக டி ஆர் எஸ் கேட்டார் எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் “டி ஆர் எஸ் இந்த போட்டித் தொடரில் புதிது. பொதுவாக டி ஆர் எஸ்-ல் பேட்டுக்குக் கொஞ்சம் முன்பாகவே எட்ஜ் வந்துவிடும். அதனால் நடுவரின் முடிவில் எனக்கு முழு உடன்பாடு இல்லை.  அதனால் திரும்பவும் ரிவ்யு செய்தேன். அவர்கள் வேறு ஆங்கிளில் அதை திருப்பிப் பார்ப்பார்கள் என நினைத்தேன். அவ்வளவுதான் மற்றபடி எதுவுமில்லை.” என விளக்கம் அளித்துள்ளார்.

சற்று முன்